Senthil Balaji Brother Arrested: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. தொடர்ந்து, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவருக்கு ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை மேப்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தொடர்ந்து, நீதிமன்ற காவலில் இருந்த அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவரை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்த நிலையில், 5 நாள்கள் காவலில் எடுக்க ஆக. 7ஆம் தேதி சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, நேற்றோடு போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, போலீஸ் காவலின் போது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் துன்புறுத்தினார்ளா? என கேட்டதற்கு தான் துன்புறுத்தப்படவில்லை என செந்தில் பாலாஜி தெரிவித்தார். அவரை மீண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்க குற்ற பத்திரிகை கொண்ட 3000 பக்க ஆதார ஆவணங்கள் டிரங்க் பெட்டியில், அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க | அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி உள்ளது? சமீபத்திய தகவல்!
இதைத்தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த வாரத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய இருப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் இளைய சகோதரர் அசோக்குமார் கேரள மாநிலம் கொச்சியில் இன்று கைது செய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கொச்சிக்கு வந்து அசோக்குமாரை கைது செய்ததாக கூறப்படுகிறது. அசோக்குமாரை இன்று மாலையில் சென்னை அழைத்து வந்து, நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகு, நான்கு முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அசோக்குமார் ஆஜராகவில்லை. பின்னர் லுக் அவுட் நோட்டீசும் வெளியிடப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு அசோக்குமாரின் மனைவிக்கு சொந்தமான நிலத்தை ED பறிமுதல் செய்தது. கரூரில் 2.49 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அசோக்குமாரின் மாமியார் செந்தில் பாலாஜியின் பினாமியாக வாங்கியதை அமலாக்கத்துறை கண்டுபிடித்ததாக கூறப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ