சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் மட்டுமே செயல்படுகிறது. எனவே இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் (Tamil Nadu) பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்புக்கு முன்பாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பள்ளி (TN Schools) மற்றும் கல்லூரிகள் திறப்புக்கான, வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.,
ALSO READ | தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்
- 50% மாணவர்களுடன் பள்ளிகள் (TN Schools) திறக்கப்பட்டால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
- முதல் நாளில் 50% மாணவர்களும், மறு நாள் எஞ்சிய 50% மாணவர்களுக்ம் மாறி மாறி பள்ளிக்கு வர வேண்டும்.
- பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி (Vaccination) செலுத்திக்கொண்டிருக்க வேண்டும்.
- பள்ளிக்கு வர விருப்பமில்லா மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியிலும் பாடங்களை கற்கலாம்.
- பள்ளி வளாகங்களில் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் காலை நேர வழிபாட்டு கூட்டங்கள் ஆகியவை நடத்தக்கூடாது.
- கொரோனா அறிகுறி உள்ள ஆசிரியர்களையும் மாணவர்களையும் பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது.
- முகக்கவசம் அணிதல், அவ்வப்போது கைகளை சுத்தம் செய்தல், தனி மனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப் பட வேண்டும்.
- பள்ளிகள் வைட்டமின் மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நேரடியாக நடைபெற வேண்டும்.
- இளங்கலை 2-ம் ஆண்டு, முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வகுப்பு நடைபெற வேண்டும்.
- இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வகுப்பு நடைபெறும். பொறியியல் படிப்புகளுக்கும், ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடத்தப்படும்.
- முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
- அனைத்து மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் கல்லூரி நிர்வாகம் இதை உறுதிப்படுத்த வேண்டும்
- தடுப்பூசி போட தவறிய கல்லூரி மாணவ மாணவியர் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
READ ALSO | இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் அதிகரித்துவிட்டது; உலக சுகாதார மையம் எச்சரிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR