அண்ணாவின் பிறந்த நாளில் சசிகலா ஏற்ற சபதம்

பிளவுபட்டுள்ள அதிமுக ஒன்றிணைய அண்ணா பிறந்தநாளில் சபதம் ஏற்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 15, 2022, 01:47 PM IST
  • அண்ணா பிறந்தநாளில் சசிகலா சபதம்
  • அதிமுகவை ஒன்றிணைப்பேன் என சூளுரை
அண்ணாவின் பிறந்த நாளில் சசிகலா ஏற்ற சபதம் title=

அதிமுகவை பிளவுபட்டுள்ள அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்பது எனது விருப்பம் என்று தஞ்சையில் சசிகலா கூறியுள்ளார். தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு சசிகலா பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க.வில் பிளவுப் பட்டு உள்ள அனைவரும்   ஒன்றிணைய வேண்டும். இந்த நாளில் நான் இதை சபதமாக ஏற்கிறேன். அதிமுகவில் அனைவரும் நிச்சயமாக ஒன்றாக இணைவோம். 

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பி.எஸ். சரியாக தான் சொல்லி இருக்கிறார். நாங்கள் அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம். இதுதான் தொண்டர்களின் விருப்பம். பண்ருட்டி ராமச்சந்திரன், எங்கள் கட்சியின் மூத்த தலைவர் என்பதால் அவரை ஓ.பி.எஸ். பார்த்திருக்கலாம். தொண்டர்கள் நினைத்தால் கட்சித் தலைமையை நான் ஏற்க தயாராகவுள்ளேன்" என கூறினார். முன்னதாக தஞ்சை பரிசுத்த நகரில் உள்ள சசிகலாவின் வீட்டு வளாகத்திற்குள் வைக்கப்பட்டு இருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அப்போது அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் சசிகலா தான் என்று தொண்டர்கள் உற்சாகத்துடன் கோஷங்கள் எழுப்பினர். சில நாட்களுக்கு முன்பு சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்த சசிகலா, அங்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிளவுபட்ட அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் எனக் கூறிய அவர், தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருவதாகவும் சாடினார். குறிப்பாக, அதிமுக ஆட்சியில் இருந்தபோது மூத்த அமைச்சராக வலம் வந்த தங்கமணியின் சொந்த தொகுதியான பள்ளிபாளையத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்து பேசினார்.

மேலும் படிக்க | குழந்தைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்த முதலமைச்சர்; காலை உணவு திட்ட தொடக்க விழா புகைப்படங்கள்

மேலும் படிக்க | காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News