தொண்டர்கள் ஒன்றிணையும் நேரம் வந்துவிட்டது... இடையில் வாள் சுழற்றும் சசிகலா

தொண்டர்கள் ஒன்றிணையும் நேரம் வந்துவிட்டது என்று சசிகலா கூறியிருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 11, 2022, 01:38 PM IST
  • அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு
  • ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு
  • அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்
தொண்டர்கள் ஒன்றிணையும் நேரம் வந்துவிட்டது... இடையில் வாள் சுழற்றும் சசிகலா title=

ஒற்றைத் தலைமையா, இரட்டைத் தலைமையா என அதிமுகவுக்குள் பூகம்பம் வெடித்தது. பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிவிட வேண்டுமென்பதில் எடப்பாடி தீவிரமாக செயலாற்ற, பன்னீர்செல்வம் நீதிமன்ற படிகளில் ஏறினார்.

ஆனால், உறுப்பினர்களின் நம்பிக்கையை பெறுங்கள் என்று கூறி ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சி அளித்தது நீதிமன்றம். இதனையடுத்து வானகரத்தில் இன்று பொதுக்குழு கூட்டம் நடந்தது.

 

பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் தன்னை நீக்கும் அதிகாரம் பழனிசாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ இல்லை. அவர்களை நான் நீக்குகிறேன் என ஓபிஎஸ் கூறினார்.

Edappadi Palanisamy

அதுமட்டுமின்றி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற ஓபிஎஸ் அங்கிருந்து வெளியே வந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதற்கிடையே, ஓபிஎஸ் மீது புகார் அளிக்கப்பட்டதால் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இப்படி அதிமுகவுக்குள் பரபரப்பான காட்சிகள் இன்று காலையிலிருந்து ஓடிக்கொண்டிருக்க சசிகலா இதுகுறித்து பேசியிருக்கிறார்.

புதுக்கோட்டையில் நடந்த தனது ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், “அதிமுகவின் இன்றைய நிலையை பார்க்கும்போது, தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மேலும் படிக்க | ADMK : உறுப்பினர்களின் நம்பிக்கையை சம்பாதியுங்கள் : ஓபிஎஸ்-க்கு நீதிமன்றம் கண்டனம்

சுயநலவாதிகளை புறந்தள்ளும் நேரமும் வந்துவிட்டது. தொண்டர்களின் எண்ணத்திற்கு மாறாக பணபலம், படைபலத்தை கொண்டு அடித்து பிடிக்கலாம் என்றால் அந்தப் பதவி நிலைக்காது. 

Sasikala

சட்டத்திற்கு புறம்பான தலைமையை தொண்டர்கள் நிராகரிக்கும் காலம் வந்துவிட்டது. இருபெரும் தலைவர்களின் ஆசியால் இந்த இயக்கம் மீண்டும் அதே பொலிவோடு மீண்டெழும். நிழுலுக்காக சண்டையிட்டு நிஜத்தை தொலைத்தவர்களின் பின்னால் குதிரைகள்கூட செல்லாது. காட்சிகள் மாறினாலும் கொள்கைகளை மட்டும் மனதில் வைத்து செயல்படுங்கள். இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” என்றார்.

மேலும் படிக்க | இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கிடைத்த ‘புரட்சி’ பட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News