சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமாரின் 69-வது பிறந்தநாள் விழா சேலத்தில் கொண்டாடப்பட்டது. போதைப்பொருள் ஒழிப்பு குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமத்துவ விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட சரத்குமார், விருந்தில் பங்கேற்ற அனைவருக்கும் சுட சுட மட்டன் பிரியாணி, மட்டன் வருவல் முட்டை மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சரத்குமார், " இன்றைய காலகட்டத்தில் தேர்தல் என்பது பணம் இருந்தால் மட்டுமே முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்த வரையில் பணமில்லா தேர்தலை சந்திக்க வேண்டும் என எண்ணுகிறது.
மேலும் படிக்க | அண்ணாமலை டீமில் இருந்து விழுந்த அடுத்த விக்கெட் - மவுனம் கலைத்த திருச்சி சூர்யா
அந்த வகையில் தங்கள் கட்சி நிர்வாகிகள் எந்த தேர்தலிலும் விருப்பம் இருந்தால் போட்டியிட்டு தங்களுக்கான மக்களின் ஆதரவை பெறலாம் எனும் நோக்கில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலைவிட சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துதான் சமத்துவ மக்கள் கட்சி பணியாற்றி வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் பணமில்லா தேர்தலை சந்தித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாக தெரிவித்தார். அதிமுகவை பொருத்தவரையில் ஏ பி சி என மூன்றாக கட்சி பிரிந்துள்ளது. இது அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை. பேசி தீர்த்துக் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். கடந்த 16 ஆண்டுகளாக இந்த கட்சியை தனி ஒரு மனிதனாக சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறேன்.
சமத்துவத்திற்காக சமத்துவ ஜனநாயகத்திற்காக தங்கள் கட்சி போராடி வருகிறது. அனைவரும் ஒற்றுமையுடன் ஒரே அணியில் திரண்டு நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நோக்கம். அந்த பயணத்தில் தொடர்ந்து எங்கள் கட்சி செயல்படும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தலிலும் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட விரும்புகிறது. அதிமுக கூட்டணியில் நாங்கள் இல்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை.
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். 14 வயதிலேயே மாணவர்கள் அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கல்வியாளர்களிடம் பேசி வருகிறோம். நடிகர்கள் அனைவரும் தங்கள் தனி திறமை வளர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களுடைய தரம் மேம்படுவதோடு, அவர்களது பொருளாதார வாழ்க்கையும் மேம்படும்" என்று கூறினார்.
மேலும் படிக்க | பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ’பாரத் ஜோடோ’ வலுக்கும் கூட்டணி கட்சிகளின் ‘கை’
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ