சமஸ்கிருத உறுதிமொழி : மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமனம்

தவறுதலாக உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்த விவகாரத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் நியமனம்.

Written by - Gowtham Natarajan | Last Updated : May 4, 2022, 01:19 PM IST
  • சமஸ்கிருத உறுதிமொழி - சர்ச்சை விவகாரம்
  • தவறுக்கு வருத்தம் தெரிவித்த டாக்டர்.ரத்தினவேல்
  • கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமனம்
சமஸ்கிருத உறுதிமொழி : மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமனம் title=

கடந்த ஏப்ரல்30ஆம் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதிதாக சேர்ந்த முதலாமாண்டு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் `ஹிப்போகிரடிக்' உறுதிமொழி எடுத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில், ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் `ஹிப்போகிரடிக்' உறுதிமொழிக்குப் பதிலாக `மகரிஷி சரக் சபத்' எனும் சமஸ்கிருத உறுதிமொழியின் ஆங்கில மொழிபெயர்ப்பை உறுதிமொழியாக எடுத்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Dean Dr Rathinavel,Madurai Rajaji, Government Medical College,Minister of Health Ma Subramanian

அதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் கல்லூரி முதல்வர் ரத்தினவேலிடம் விளக்கம் கேட்டது. இதனைத்தொடர்ந்து தவறுதலாக உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்த விவகாரத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து சம்பவம் குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்துவதற்காக மே2ஆம் தேதி மருத்துவ கல்வி இயக்குநரகத்தைச் சேர்ந்த சிறப்பு குழு ஒன்று மதுரை மருத்துவ கல்லூரிக்கு சென்றது. அதில், சமஸ்கிருத உறுதிமொழி தொடர்பாக 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

Dean Dr Rathinavel,Madurai Rajaji, Government Medical College,Minister of Health Ma Subramanian

மேலும் படிக்க | உள்ளாட்சித்துறை அமைச்சராகும் உதயநிதி? அன்பில் மகேஷ் ‘மாஸ்டர் பிளான்’?

இதற்கிடையே உறுதிமொழி ஏற்பு விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு நேரில் விசாரணை நடத்துவதற்காக நேற்று ராஜாஜி அரசு மருத்துவ கல்லூரிக்கு சென்றிருந்தார். அங்கு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த டீன் ரத்தினவேல், தற்காலிகமாக பொறுப்பேற்றுக்கொண்ட டீன் தனலட்சுமி, மாணவர் அமைப்பு தலைவர் ஜோதிஸ் குமாரவேல் உள்ளிட்டோரிடம் கல்லூரி டீன் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்ததை அடுத்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக ரத்னவேல் மீண்டும் நியமிக்கப்படுவதாகப் பேரவையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க | நேற்று ஒரே நாளில் இவ்வளவு தங்கம் விற்பனையா? அதிர்ச்சி ரிப்போர்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News