ஊரகப்பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்க ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு: TN GOVT

ஊரகப் பகுதிகளில் 300 கி.மீ தொலைவிற்கு கான்கிரீட் சாலை அமைக்க ரூ. 95 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 5, 2019, 05:20 PM IST
ஊரகப்பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்க ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு: TN GOVT title=

சென்னை: ஊரகப்பகுதிகளில் 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு குடியிருப்பு தெருக்கள் மற்றும் பாதைகளை கண்டறிந்து கான்கிரீட் சாலைகள் அமைக்க 95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இதுக்குறித்து சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளில் தனித்துவிடப்பட்ட கிராமங்களை இணைக்கும் வகையில் பாலம், கழிவு நீர் செல்லும் வடிகால் வசதியுடன் கூடிய கான்கீரிட் சாலைகள் அமைக்கப்படவுள்ளன. 

இதுக்குறித்து தமிழக அரசின் அரசாணையில் கூறியதாவது, மக்கள் மழைக் காலங்களில் பாதுகாப்புடன் வாழவும், விவசாயிகள் தங்கள் பயிர்களை கான்கிரீட் சாலைகளில் உலர வைக்கவும் இந்த சாலைகளை பயன்படுத்த முடியும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை உடனடியாக தொடங்கவும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News