'கல்வி மூலம் விடுதலை' - விளிம்புநிலை மக்களுக்கான உதவித்திட்டம்!

'கல்வி மூலம் விடுதலை' எனும் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 7500 க்கும் மேற்பட்ட வகுப்பறைகளை கட்டமைத்து உள்ளதாக ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் தலைவர்கள் சந்தோஷ், விஜய் ராகவேந்திரா ஆகியோர் தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 20, 2022, 01:14 PM IST
  • திருநங்கைகளுக்கு அழகியல் குறித்த பயிற்சி திட்டம்.
  • அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் திருநங்கைகளுக்கும் உதவி.
'கல்வி மூலம் விடுதலை' - விளிம்புநிலை மக்களுக்கான உதவித்திட்டம்! title=

ஒவ்வோராண்டும் நவம்பர் 14 ஆம் தேதி முதல் ரவுண்ட் டேபிள் இந்தியா வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் இந்த ஆண்டும் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. 

இதன் ஒரு பகுதியாக, 5 திருநங்கைகளுக்கு அழகு மற்றும் அழகியல் குறித்த பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டு, அழகு, தோல் பராமரிப்பு, அழகியல் மற்றும் முடி பராமரிப்பு ஆகியவற்றில் பயிற்சி அளிக்க நேச்சுரல்ஸ் சலூன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.  

இதுகுறித்து நேச்சுரல்ஸ் சலூன் நிறுவனர் வீணா குமார்வேல்,"5 திருநங்கைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ள ரவுண்ட்  டேபிள் இந்தியாவின் முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் அந்த அமைப்புடன் நேச்சுரல்ஸ் சலூன் கை கோர்த்திருப்பது பெருமையான விஷயம்" என்றார்.  

மேலும் படிக்க | சமத்துவத்தை ஊக்குவிக்கும் ஃபேஷன் ஷோ... சென்னையில் ஒரு மாற்று முன்னெடுப்பு

Round Table India

இந்த நிகழ்வில் பிரபல ஃபேஷன் கொரியோகிராபரும், LGBTIQ+ ஆர்வலருமான  கருண்ராமன், லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பின் பகுதி தலைவர்  திவ்யா சேத்தன், பகுதி செயலாளர் மற்றும் பொருளாளர் தன்யா சேத்தி, ரவுண்ட் டேபிள் இந்தியா தலைவர் குணால் சௌத்ரி,  ஜஸ்னீத் கவுர் கோஹ்லி,  மெட்ராஸ் ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் தலைவர் பிரம்ஜோத் சிங் கோலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மேலும் அரசுத் தேர்வுக்கு தயாராகும் 3 திருநங்கைகளுக்கு படிப்பதற்கான உபகரணங்களை பிரம்ஜோத்சிங் கோலி வழங்கினார்.

இதனையடுத்து, நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் தலைவர் சந்தோஷ், "'கல்வி மூலம் விடுதலை' என்கிற திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 7890 வகுப்பறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளோம். குழந்தைகளுக்கான இலவச இருதய அறுவை சிகிச்சை, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வரும் இந்த அமைப்பு, ஐ.ஐ.டி யுடன் இணைந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வீல் சேர்களை உருவாக்கி சுமார் 200 பேருக்கு வழங்கியுள்ளது.  இது தவிர நிதி நிறுவனங்களுடன் இணைந்து 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உதவி செய்து வருகிறது. 

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் ஏரியா 2 தலைவர் விஜய் ராகவேந்திரா கூறும்போது,"எங்கள் அமைப்பின் ஏரியா 2 என்பது சென்னை, புதுச்சேரி மற்றும் நெல்லூர் ஆகிய இடங்களை உள்ளடக்கிய பகுதி. இந்த பகுதியில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | விழித்த தமிழனை இனி வீழ்த்த முடியாது - நீதிக்கட்சி தொடங்கிய நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News