வட தமிழகத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது:- மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஆந்திர கடற்கரைக்கு அப்பால் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் சாய்ந்த நிலை வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் காணப்படுகிறது.
இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தின்சில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது எனக்கூறினார்.