Tamil Nadu Rain Forecast: தமிழ்நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று இரவு இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், நாளை முதல் வெப்பம் படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Tamil Nadu Heatwave Warning: தமிழ்நாட்டில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட தமிழகத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது:- மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஆந்திர கடற்கரைக்கு அப்பால் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் சாய்ந்த நிலை வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் காணப்படுகிறது.
இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தின்சில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் அனேக இடங்கங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இதைக்குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:- கன்னியகுமரி பகுதியில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அனேக இடங்களிலிலும் மழை பெய்யும ஒரு சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கும்.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரை மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாக வாய்ப்பு உள்ளது.
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை வலுவடைந்து உள்ளது. வடக்கு வங்க கடலில் இருந்து மேற்கு வங்க கடல்வரை உள்ள பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.