ஆர்.கே.நகர் தேர்தலுக்கு சுமார் 3 கோடி செலவு: தேர்தல் ஆணையம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் இதுவரை சுமார் 3-கோடி வரை செலவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். 

Last Updated : Dec 19, 2017, 04:23 PM IST
ஆர்.கே.நகர் தேர்தலுக்கு சுமார் 3 கோடி செலவு: தேர்தல் ஆணையம்! title=

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் நிலையில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கடைசி நாளான இன்று அரசியல் கட்சிகள் தீவிர பிரட்சரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதையடுத்து, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக இதுவரை மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் வரை செலவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

வழக்கமாக ஒரு இடைத்தேர்தல் நடத்துவதற்கு ரூ.75 லட்சம் வரை மட்டுமே செலவாகும் என கூறியுள்ள தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தற்போது வரை மட்டும் ரூ.3 கோடி வரை செலவாகியுள்ளதாக கூறியுள்ளது.

Trending News