கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகமும் அந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. தமிழகத்தில் தற்போது ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளனர். தினசரி தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டுகிறது.
கொரோனா வைரஸால் (Coronavirus) பாதிக்கப்படுபவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மூச்சுத் திணறலால் உயிரிழப்பதே அதிகமாக உள்ளது. இதனால் நாடெங்கும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்து மிக முக்கியமாக இருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் ரெம்டெசிவிர் மருந்துக்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ALSO READ | ரெம்டெசிவிர் மருந்து வாங்க அலைமோதும் மக்கள்
தினமும் ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றுக்கேற்ப இத்தனை மருந்துகள் தேவைப்படும் என்று டாக்டர்கள் பரிந்துரை செய்கிறார்கள். நோய் தொற்று குறைவாக இருப்பவர்களுக்கு ஒரு குப்பி மருந்தே போதுமானதாக உள்ளது. அதே நேரத்தில் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால் 4 குப்பிகள் வரை மருந்து செலுத்த வேண்டி உள்ளது.
இப்படி டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை முழுமையாக வழங்கி வருகிறார்கள். இதன் காரணமாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் தினமும் 150 பேர் வரையிலேயே ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி சென்றனர்.
இந்நிலையில் தற்போது கொரோனா சிசிக்சைக்கான ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதை குறைக்க ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் கீழ்ப்பாக்கத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது போன்ற இக்கட்டான சூழலில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை திருப்தி அளிக்கிறது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR