இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்கக்கோரி மீன்வளத் துறை அலுவலகம் முற்றுகை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி மீனவர்களின்  உறவினர்கள் மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகை இட்டுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 10, 2022, 01:09 PM IST
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்கக்கோரி மீன்வளத் துறை அலுவலகம் முற்றுகை title=

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி மீனவர்களின்  உறவினர்கள் மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகை இட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 68 மீனவர்கள் இலங்கை கடற்படையால் அதிரடியாக கைது செய்யப்பட்ட அந்நாட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் புதுக்கோட்டை மூன்று மாவட்ட மீனவர்கள் உடன் இணைந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். 

ALSO READ | ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல்

இந்நிலையில், கடந்த 5 ந்தேதி மண்டபம் பகுதியைச் சேர்ந்த  12 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் எஞ்சிய 56 மீனவர்களையும்  விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் (Indian Fisherman) இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வள துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு,அலுவலகத்தின் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களின் உறவினர்கள் மீன்வளத்துறை இணை இயக்குனருக்கு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 18 ,19 ஆகிய தேதிகளில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 43 ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதாவது இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற மீனவர்களின் குடும்பத்தினர் அன்றைய தினத்திலிருந்து வாழ்வாதாரம் இன்றி வறுமையில் சிக்கி தவித்து வருகின்றனர்.

 மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் இதுநாள் வரை குடும்பத்தாரிடம் எந்த தொடர்பும் இன்றி அவர்களின் நிலை குறித்து கேள்வி குறியாகி இருக்கிறது. எனவே உடனடியாக, மத்திய மாநில அரசுகளிடம் வலியுறுத்தி,கோட்டைப்பட்டினம் மீனவர்கள் உள்பட 56   மீனவர்களையும் 10 படகுகளையும் உடனே மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

ALSO READ | இலங்கை சிறையில் இருந்த 23 தமிழக மீனவர்கள் விடுதலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News