நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்த காரணம் என்ன? - முழு விவரம்

Nirmala Seetharaman AIADMK: கோவையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏகே செல்வராஜ், அமுல் கந்தசாமி உள்ளிட்டோர் சந்தித்தனர். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 3, 2023, 03:37 PM IST
  • இது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்கள சந்தித்தார்.
  • இதில் கூட்டணி தொடர்பாக பேசவில்லை என விளக்கம்.
  • மற்றபடி யாரோடும் அம்மாவை (ஜெயலலிதா) ஒப்பிட முடியாது - பொள்ளாச்சி ஜெயராமன்
நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்த காரணம் என்ன? - முழு விவரம் title=

Nirmala Seetharaman AIADMK MLAs Meeting: கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற மாபெரும் கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு கடன் உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏகே செல்வராஜ், அமுல் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக மூவரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தனர்.

மீண்டும் வலியுறுத்தல்

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், "சென்ற மாதம் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து தென்னை விவசாயம் சார்ந்த மனுக்களை அளித்தோம். அப்போது கொடுத்த மனுவை மீண்டும் வலியுறுத்துவதற்காக இன்றைய தினம் நிர்மலா சீதாராமனை சந்தித்து மீண்டும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.
 
இதில் வேறு எந்த ஒரு அரசியல் காரணமும் கிடையாது. தென்னை நார் தொழிற்சாலைகள் நசிந்து போய் உள்ளது. தேங்காய் விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். இது குறித்து மாநில அரசிடமும், மத்திய அரசிடமும் வலியுறுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக தான் தற்பொழுதும் இது குறித்து வலியுறுத்தினோம். இது தவிர வேறு எந்த காரணமும் இல்லை.

மேலும் படிக்க | AIADMK Vs BJP: டெல்லியில் அண்ணாமலை.. அமைதியாக இருங்கள்.. எச்சரித்த மேலிடம்!

இபிஎஸ் தான் முடிவெடுப்பார்

கூட்டணி குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. தென்னை விவசாயத்தைப் பற்றி மட்டுமே நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்" என்றார். கூட்டணி முறிவு நிலைப்பாடு குறித்தான கேள்விக்கு, "அது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவெடுப்பார்" என பதிலளித்தார். zeenews.india.com/tamil/tamil-nadu/why-did-admk-leaves-from-bjp-alliance-edappadi-palaniswami-answer-466251

மேலும் அவர், "இது எந்த ஒரு அரசியல் ரீதியிலான சந்திப்பும் இல்லை. விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து மாநில முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கூறினோம். ஆனால் அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து விவசாயத்துறை அமைச்சரிடமும் கோரிக்கைகளை முன்வைத்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளித்ததன் அடிப்படையில் தற்பொழுது அதனை மீண்டும் வலியுறுத்தினோம். தற்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர், நான் சட்டமன்ற உறுப்பினர். மற்ற இருவரும் அவர்கள் தொகுதியில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தினர்" என்றார்.

மேலும், மேடையில் பேசும் பொழுது பொள்ளாச்சி ஜெயராமன் அம்மா என்ற வார்த்தையை குறிப்பிட்டு பேசியது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், "எங்களை பொறுத்தவரை ஒரே அம்மா எங்கள் ஜெயலலிதா அம்மா தான். மத்திய நிதி அமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக குறிப்பிட்ட சொல்லும்போது அம்மா என்று குறிப்பிட்டோம். மற்றபடி யாரோடும் அம்மாவை(ஜெயலலிதா) ஒப்பிட முடியாது" என பதிலளித்தார்.

மேலும் படிக்க | Caste Census | மண்டல் 2.0: மாற்றம் வருமா? பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு! அஞ்சும் பாஜக!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News