ரேஷன் கார்டுகளில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

குடும்ப அட்டைகளின் உபயோகம், விநியோகம் ஆகியவற்றில் பல்வேறு புதிய அம்சங்களை இணைத்திருப்பதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 8, 2022, 05:31 PM IST
  • ரேசன் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.
  • நீலகிரி, தருமபுரி மாவட்டங்கில் அரிசிக்கு பதில் கேழ்வரகு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
ரேஷன் கார்டுகளில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு title=

இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது.

இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் சக்கரபாணி, தற்போது புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகள் வட்ட வழங்கல் அலுவலகம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மண்டல அலுவலகங்கள் மூலமாக பெற்று வருகின்றனர். 

உறுதி செய்யப்பட்ட சேவையினை அளிக்கும் பொருட்டும், நேரடியான தொடர்பினை தவிர்க்கும் பொருட்டும், இந்திய அஞ்சல் துறையின் மூலம் பயனாளிகளின் இருப்பிடத்திற்கு பயனாளிகளின் விண்ணப்பத்தின் பேரில், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

One nation One Card

மேலும் இந்த அறிவிப்போடு அவர் பல்வேறு புதிய திட்டங்களையும் முன் வைத்தார்.

அதில் சிறப்பம்சமாக ரேசன் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.

அடுத்ததாக, நீலகிரி, தருமபுரி மாவட்டங்கில் அரிசிக்கு பதில் கேழ்வரகு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், மாநில, மாவட்ட அளவில் சிறந்த ரேசன் கடை விற்பனையாளர்கள், எடையாளர்களைத் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பின்னர், டெல்டா மாவட்டங்களில் 6 அரிசி ஆலைகள் அரசு - தனியார் பங்களிப்புடன் நிறுவப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

One nation One Card

மேலும் முன்னதாக புதிய ரேசன் கார்டுகள் வழங்கும் செயல்முறைக்கு அதிக நாட்கள் ஆகும் என்ற நிலை இருந்தது. இதனை தற்போது அவர் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இனி ரேசன் கார்டு விண்ணப்பித்த மறுநாளே விண்ணப்பதாரரின் கைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சட்டம் ஒழுங்கு சீரழிவைத் தடுக்க, உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறை அவசியம்: சீமான்

முன்னதாக ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தின் மூலம் பயணாளிகள் நாட்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பேசிய அவர், இந்தத் திட்டத்தினால் பல்லாயிரக் கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பயன் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Ration card

இதற்கிடையில், கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது, ஊரடங்கு காலத்தில் ஏழைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய கடந்த ஆண்டு மார்ச் மாதம், ‘பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

அந்த மத்திய அரசின் இலவச ரேசன் திட்டம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

இவ்வாறு நியாய விலையில் அத்தியாவசியப் பொருட்கள், அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ரேசன் கடைகளின் உண்மையான நோக்கம் தற்போது சுலபமான செயல்முறைகளுடன் நிஜமாகிறது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் படிக்க | தமிழக கல்விக்கொள்கை: புதிதாக அமைக்கப்பட்ட குழு என்ன செய்யும்?- எழுத்தாளர் விழியன் பகிர்வு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News