ரேஷன் அட்டை நமது அத்தியாவசிய ஆவணங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதன் அடிப்படையில்தான் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் அரசாங்க திட்டங்களின் நன்மைகளை பெறவும் ரேஷன் கார்டுகள் தேவையாக இருக்கின்றன.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் (Ration Card Update) புதிதாக விண்ணப்பித்த 3 லட்சம் பேருக்கு ரேஷன் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு (Ration Card) வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ALSO READ | Ration Card: புதிய குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை ரேஷன் கார்டில் சேர்ப்பது எப்படி
இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட பாதிப்பிற்கான நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு இதுவரை 99 சதவிகித குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. மேலும் குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் மாற்ற வேண்டுமா வேண்டாமா என்ற விவகாரத்தில் யாரும் அச்சமடைய வேண்டும். இது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான முடிவினை முதலமைச்சர் அறிவிப்பார் என்று உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளுக்கு பொருள் வழங்குவதற்கான சிவில் சப்ளைஸ் டெண்டர் விவகாரத்தில் தவறுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் நியாயவிலைக்கடைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் இரண்டு மாதங்களுக்குள் நிரப்பப்படும். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் பயோமெட்ரிக் மூலம் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ALSO READ: Ration Card Apply: புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR