’வெள்ளை நாகப்பாம்பு’ கோவை வனப்பகுதியில் விட்ட வனத்துறை

கோவையில் குடியிருப்பு பகுதியில் வெள்ளை நிற நாகப் பாம்பை மீட்ட வனத்துறையினர், அதை அடர் வனப்பகுதியல் விடுவித்தனர். வெள்ளி நிறத்தில் இருந்த நாக பாம்பை பார்த்து அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 4, 2023, 01:49 PM IST
  • கோவையில் வெள்ளை நாகப்பாம்பு
  • குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது
  • பத்திரமாக காட்டில் விட்ட வனத்துறை
’வெள்ளை நாகப்பாம்பு’ கோவை வனப்பகுதியில் விட்ட வனத்துறை  title=

வெள்ளை காகம், வெள்ளை பாம்புகள் செல்வதாக கிராம புறங்களில் வேடிக்கையாக சொல்வார்கள். ஒருவரை ஏமாற்றவோ அல்லது கிண்டல் கேலி செய்தவற்காக இப்படி சொல்லி விளையாடுவார்கள். ஆனால் உண்மையிலேயே கோவையில் வெள்ளை நாக பாம்பு வர, அதனை பார்த்து மக்கள் திகைத்துபோயினர். இவ்வளவு நாள் வெள்ளை நிறத்தில் நாக பாம்பை பார்த்து இல்லையே என வியப்பின் உச்சத்துக்கு சென்றவர்கள், இது குறித்து வனத்துறைக்கும் தெரவித்தனர். 

மேலும் படிக்க | நாடாளுமன்றத்துக்கு போகாத அன்புமணி ராமதாஸ் டெல்லியில் கேட்க தைரியம் இருக்கிறதா? - செந்தில் பாலாஜி கேள்வி

கோவை குறிச்சி சக்திநகர் பகுதியில் ஏராளமான வீடுகள் இருக்கின்றன. மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிதான் அது. இருப்பினும் அங்கிருக்கும்  ஒரு வீட்டில் வெள்ளை நிற பாம்பை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனடியாக இது விநோதமான படைப்பு என எண்ணிய அவர்கள், வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு சென்ற வன ஆர்வலர்கள் அந்த வெள்ளை நிற நாகத்தை காயமின்றி பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை கோவை வனத்துறை அதிகாரகளிடம் ஒப்படைத்தனர். வனத் துறையினர் அந்த வெள்ளை நிற நாகத்தை அடர் வனப்பகுதியில் விடுவித்தனர். 

இரண்டாம் தேதி இரவு இந்த வெள்ளை நிற நாகம் பிடிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை அடர் வனப்பகுதியில் விடுவிக்கபட்டது. அல்பினோ கோப்ரா என்ற வகையை சேர்ந்த இந்த நாகப்பாம்பு மரபணு பிரச்சினை காரணமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும், இது போன்ற மரபணு மற்றும் நிறமிகளில் இருக்கும்  பிரச்சனைகளால் இருக்கும் பாம்புகள் வெள்ளைநிறத்தில் இருக்கும் எனவும் வன ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டும் கோவை மதுக்கரை பகுதியில் இதே போன்ற வெள்ளை நிற பாம்பு மீட்கப்பட்டது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க | ஏற்காடு செல்வோர் கவனத்திற்கு! இந்த வாகனங்களுக்கு அனுமதி இல்லை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News