வெளிறிய இலவங்கப்பட்டை ரோமங்களுடன் பெரிய சுண்டெலி போன்ற தோற்றத்தில் இருக்கக்கூடியது சுலெவின் சுண்டெலி. இந்த உயிரினம் கேடலினா என்ற வகையை சேர்ந்த சுண்டெலி மான் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தெற்கு பாகா கலிபோர்னியாவின் ஐலா சாண்டா கேடலினா பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரையில் இருந்து, சுமார் 40 கிலோ மீட்டர் பரப்பளவில் மட்டுமே இந்த வகை உயிரினம் காணப்படுகிறது.
மேலும், இந்த சுண்டெலி மான், அந்த தீவின் பூர்விக பாலூட்டிகளாகவும் உள்ளன. இதற்கு சுலெவின் சுண்டெலி என கலிபோர்னியாவின் அறிவியல் குழுமத்தினைச் சேர்ந்த அருங்காட்சியகக் காப்பாளர் ஜோசப் சுலெவின் பெயரிட்டுள்ளார். இந்த சுண்டெலி மானின் மொத்த நீளம் சுமார் 21 சென்டி மீட்டர் ஆகும் அதில் 10 சென்டி மீட்டர்கள் வாலின் நீளமாகும்.
மேலும் படிக்க | பார்க்க தான் பூனை..பாய்ஞ்சா புலி..கெத்து காட்டும் பூனை!
மிகவும் அரியவகையை சேர்ந்த இந்த சுண்டெலி மான் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்லா மற்றும் பாலாகாட் ஆகிய மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியில் ஏற்கனவே காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அரியவகை சுண்டெலி மான் ஒன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அளக்கரை எஸ்டேட் பகுதியில் சுற்றி திரிந்துள்ளது.
இதை பார்த்த எஸ்டேட் ஊழியர்கள் ஏதோ புதிய வகை உயிரினமாக உள்ளது என ஆச்சரியத்தில் ஆழ்ந்து வியப்புடன் பார்த்துள்ளனர். தொடர்ந்து சிலர் அந்த சுண்டெலி மானை செல்ஃபோனில் வீடியோவும் எடுத்துள்ளனர். சற்று நேரம் அங்கு உலா வந்த அந்த சுண்டெலி மான், தொடர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.
அரியவகை சுண்டெலி மான்: வைரலான வீடியோ..!https://t.co/40NriB9Bfq | #Wildlife | #Ratdeer | #ViralVideo | #ZeeTamilNews pic.twitter.com/Svs5RDo6cD
— Zee Tamil News (@ZeeTamilNews) April 21, 2022
உலக அளவில் அரியவகை உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சுண்டெலி மான் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அந்த உயிரினத்தை முழுமையாக பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின பாதுகாப்பு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | பாண்டா கரடியிடம் பன்ச் வாங்கிய பூங்கா பராமரிப்பாளர்! வைரலாகும் வீடியோ !
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR