பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள், ஆளுநர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவுறுத்தல்...!
புதுடில்லி (பிடிஐ) ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், பேரரிவாளன், சாந்தன், ஜெயகுமார், ராப்ர்ட் பயாஸ், ரவிசந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகிய மூவர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, ‘குற்றம் சுமத்தப்பட்ட 7 பேர் குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உரிமையுண்டு. அவர்கள் ஆளுநருக்கு விடுதலை குறித்து பரிந்துரை செய்யலாம்’ என்று தெரிவித்தது.
அதனை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்முன்னாள் இந்திய பிரதமர் திரு.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேர் விடுதலை செய்வது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது.., முன்னாள் இந்திய பிரதமர் திரு.ராஜீவ்காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டதை என்றைக்கும், யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனாலும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகாலமாக சிறைதண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் இன்னும் காலம் தாழ்த்தி அரசியல் நடத்தாமல், அவர்களுக்கு நல்ல தீர்ப்பு தரவேண்டும்.
ஏனென்றால் அவர்கள் பல ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்ததை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும், ஆளுநரும் இந்த பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக எழுபேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.