சென்னை: கோவாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்பொழுது ரஜினி கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவரிடம், தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எடுபடாது என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்து பற்றி கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் மிகப்பெரிய அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டுவார்கள் எனக் கூறினார். இதற்கு ஒரு தரப்பில் இருந்து ஆதரவும், மற்றொரு தரப்பில் இருந்து எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு விருதை வழங்க நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். 50ஆவது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவையொட்டி ரஜினிக்கு ‘ICON OF GOLDEN JUBILEE' விருதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து வழங்கினார்கள்.
திராவிட மண்ணில் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை - ஜெயக்குமார் திட்டவட்டம்!
விருதை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், எனக்கு விருது வழங்கி கவுரவித்த இந்திய அரசுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என கூறியிருந்தார்.
கோவாவில் இருந்து தமிழகம் திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்பொழுது பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். நடிகர் ரஜினிகாந்த் கூறியது, எனக்கு கிடைத்த ‘ICON OF GOLDEN JUBILEE' சிறப்பு விருதுக்கு தமிழ் மக்கள் தான் காரணம். இதனால் அவர்களுக்கு விருதை சமர்ப்பிக்கிறேன் எனக் கூறினார்.
CM ஆவோம் என EPS கனவில் கூட நினைத்திர்க்க மாட்டார்: ரஜினி!
ரஜினி - கமல் இணைவு குறித்து பேசிய அவர், நாங்கள் இருவரும் இணைந்தால், முதல்வர் வேட்பாளர் யார் என்று தேர்தலில் நேரத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார். அதேபோல 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் மிகப்பெரிய அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டுவார்கள் எனக் கூறினார்.
நடிகர் ரஜினியின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிசயம் நடக்கும் எனக் ரஜினி கூறியதுமே, தமிழக முதல்வர் பழனிசாமி உட்பட பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அதாவது, தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. மேலும் இங்கு சிஸ்டம் சரியில்லை. அதனால் நான் அரசியலுக்கு வருவது உறுதி. அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்ந்து நடைபெறும். 2021 ஆம் ஆண்டு நிச்சயமாக தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் எனக் கூறியிருந்தார். அதற்கான ஏற்பாடுகளும் ரஜினி மக்கள் மன்றம் மூலம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் நடிகர் ரஜினி தொடர்ந்து சில பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்" படத்தில் நடித்து வருகிறார். அடுத்து இயக்குனர் சிவா படத்திலும் நடிக்க உள்ளார்.
தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான்: MK.அழகிரி
சமீபத்தில் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை போற்றும் வகையில் கொண்டாப்பட்ட “கமல்-60” என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய ரஜினி, கமல்ஹாசனுக்கு புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “2 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் ஆவோம்” என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 10 நாட்கள் கூட தாங்காது, 4, 5 மாதங்களில் ஆட்சி கவிந்து விடும் என சொல்லாதவர்களே இருந்திருக்க முடியாது. ஆனால் அதிசயம் நடந்தது. நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும் என்று கூறினார்.
அதன்பின்னர் ரஜினி - கமல் இணைவு பற்றி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியது, தமிழ்நாட்டின் நலனுக்காக, மேம்பாட்டிற்காக நானும், ரஜினிகாந்தும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் இணைந்து பயணிப்போம். நாங்கள் இருவரும் இணைவதற்கான அவசியம் ஏற்பட்டால் இணைவோம். ரஜினி சொன்ன அந்த அதிசயம் உண்மைதான் என்றார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.