கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பம் என்ற கிராமம் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் சொந்த ஊர். இந்த ஊருக்கு திடீர் வருகை தந்தார் நடிகர் ரஜினிகாந்த். அவரின் சொந்தமான இடத்தில் பெற்றோருக்கு நினைவாக மணிமண்டபம் கட்டப்பட்டுள்ள நிலையில் சமாதியில் பெற்றோர்களுக்கு மாலை அணிவித்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் அவரது உடன் பிறந்த அண்ணன் சத்தியநாராயண ராவ் அவர்களும் இணைந்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் படிக்க | "பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?" எடப்பாடி பழனிசாமி கேள்வி!
பின்னர் நாச்சிக்குப்பம் கிராமத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்து பின்னர் அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். தற்போது இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும், நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பணிபுரிந்த இடத்தில் சென்று பார்வையிட்டு பெங்களூர் உள்ள தனது அண்ணன் சத்தியநாராயண ராவ் வீட்டில் ஓய்வெடுத்தார்.
(@RajiniGuruRG) August 31, 2023
பின்னர் இன்று காலை சாலை மார்கமாக காரில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த நாச்சிக்குப்பம் தனது பூர்விக கிராமத்திற்க்கு சென்று பெற்றோர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக தனது அண்ணனுடன் நடிகர் ரஜினிகாந்த் சொந்த கிராமத்திற்கு வருகை புரிந்தது , கிராம மக்களுக்கும் , உறவினர்கள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கிராம மக்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | I.N.D.I.A. கூட்டணி: நான்காவது கூட்டம் தமிழ்நாட்டிலா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ