ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அவரது ரசிகர்கள் போராட்டம்!
நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்திருந்தார். இது தொடர்பாக டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், கொரோனா பரவல் (Coronavirus) மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு தம்மால் அரசியலுக்கு வர இயலாது; அரசியல் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் திடீரென அறிவித்தார். இதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இது ரஜினி ரசிகர்களை (Rajini Fans) அதிர்ச்சி அடைய வைத்தது.
இதன்பின்னர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் (Rajinikanth Political Entry) என்பதற்காக பல நூதன போராட்டங்களை ரசிகர்கள் நடத்தினர். இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் திரண்டு இன்று காலை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ALSO READ | Rajinikanth: ”கடவுளின் எச்சரிக்கை” அறிக்கை, அரசியலுக்கு மட்டுமா, இல்லை சினிமாவுக்குமா?
சென்னை வள்ளுவர் கோட்டம் (Chennai's Valluvar Kottam) அருகே ஜனவரி 10 ஆம் தேதி (இன்று) அனைத்து ரசிகர்களும் ஒன்று திரண்டு ரஜினியை அரசியலுக்கு அழைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களும், மாநில தலைமையும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகளில், ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி யாரும் போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆனால், ரஜினி ரசிகர்கள் (Rajinikanth fans) அதனை பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி ஜனவரி 10 ஆம் தேதி (இன்று) நுங்கம்பாக்கத்தில் ஒன்றுகூடுவதற்கு முடிவு செய்தனர். மேலும், இந்த அறவழி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ரஜினி ரசிகர்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில் #அரசியலுக்கு_வாங்க_ரஜினி என்ற வாசகம் டுவிட்டரில் டிரெண்டிங் உள்ளது.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR