சென்னை மக்களே இரவில் ஜாக்கிரதை... இன்றும், நாளையும் வெளுக்கப்போகுது மழை - வானிலை அப்டேட்

Rain Alert for Chennai: சென்னையின் நகர் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 16, 2023, 05:11 PM IST
  • சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்தது.
  • இன்றிரவும், நாளை இரவும் அதிக மழைக்கு வாய்ப்பு என தகவல்.
  • இந்த மாதத்தில் பிற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.
சென்னை மக்களே இரவில் ஜாக்கிரதை... இன்றும், நாளையும் வெளுக்கப்போகுது மழை - வானிலை அப்டேட் title=

Rain Alert for Chennai: கிழக்கு மத்திய பிரதேசம்  மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  நேற்று (செப். 15) காலை மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாள்களுக்கு மழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (செப். 16) தெரிவித்துள்ளது. 

அந்த வகையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று (செப். 16) பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை அறிக்கையில் கூறப்பட்ட நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மதுரவாயல், போரூர், வளசரவாக்கம், அம்பத்தூர், பாடி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. 

அதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான பல்லாவரம், புழல், செங்குன்றம், மாதவரம், சோழவரம், மணலி, பொன்னேரி, காரனோடை, தாம்பரம், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி, , ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் மழை பரவலாக பெய்தது. 

நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும் என கூறப்பட்டிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டிருந்தது. 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் (செப். 17) நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

இன்றும், நாளையும்...

இது ஒருபுறம் இருக்க தமிழ்நாடு வெதர்மேன் அவரது சமூக வலைதளப் பதிவில், இந்த தென்மேற்கு பருவநிலையில் தற்போது தான் அதிக மழைபொழிவை தமிழ்நாடு காணப்போவதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இன்றிரவும், நாளை இரவும் சென்னையில் பரந்தளவில் மழை பொழிவு இருக்கும் எனவும் அவர் கணித்துள்ளார். 

அவரின் முந்தைய பதிவில், இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இன்று அதிக மழைப்பொழிவு இருக்கப்போகிறது என்றும் மேலும் இந்த மாதத்தின் பிற்பகுதியில் மேல் கூறிய மாவட்டங்களுடன், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, டெல்டா, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சாதனை அளவை தொடுமா?

அதுமட்டுமின்றி, எல்லா நேரத்திலும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை இருக்கும் தென்மேற்குப் பருவமழை என்பது தென் சென்னைக்கு மிக அதிக மழை பொழிவை தரும் என கூறி, அதற்கான புள்ளிவிவரங்களையும் பகிர்ந்திருந்தார். அதில், நடப்பு தென்மேற்குப் பருவமழையில் சென்னையின் மீனம்பாக்கத்தில் 788 மி.மீ., மழை பெய்திருக்கிறது. இதற்கு முன், மீனம்பாக்கத்தில் 1996ஆம் ஆண்டில் 871 மி.மீ., மழை பெய்ததே அதிகபட்சமாக இருக்கிறது. இன்னும், பருவமழை நிறைவடைய 14 நாள்கள் இருக்கும் நிலையில் அதனை விஞ்சிவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னையின் மற்றொரு பகுதியான நுங்கம்பாக்கத்தில் இதுவரை 603 மி.மீ., மழை பதிவாகியிருக்கிறது. அங்கு 1996ஆம் ஆண்டில் 1155 மி.மீ., மழை பெய்ததே அதிகபட்சமாக இருக்கிறது. இரண்டாவது அதிகபட்சமாக 1870ஆம் ஆண்டில் 860 மி.மீ., மழையும், மூன்றாவதாக 2011ஆம் ஆண்டில் 853 மி.மீ., மழை பதிவாகி இருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கோவை கார் வெடிப்பு சம்பவம்: தமிழகம் முழுவதும் என்ஐஏ சோதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News