நிர்வாகிகள் போனா என்ன; அதான் தொண்டர்கள் இருக்கிறார்களே: TTV தினகரன்

நிர்வாகிகள் விலகுவதால் அமமுக நிலைகுலைந்து விடாது; எங்களுடன் தொண்டர்கள் உள்ளனர் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Jun 29, 2019, 12:25 PM IST
நிர்வாகிகள் போனா என்ன; அதான் தொண்டர்கள் இருக்கிறார்களே: TTV தினகரன் title=

நிர்வாகிகள் விலகுவதால் அமமுக நிலைகுலைந்து விடாது; எங்களுடன் தொண்டர்கள் உள்ளனர் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்!!

அமமுக கட்சியின் நிர்வாகிகள் விலகுவதால் கட்சி ஒருபோதும் உருக்குலைந்து விடாது; கட்சித் தொண்டர்கள் எங்களுடன் உள்ளனர் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்; நிர்வாகிகள் விலகுவதால் அமமுக நிலைகுலைந்து விடாது; தொண்டர்கள் எங்களுடன் உள்ளனர். மேலும், தங்க தமிழ்ச்செல்வனை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனக் கூறினார். அடுத்த தேர்தலுக்குள் பலன்களை அனுபவிப்பதற்காகவே வெளியேறி சென்றுள்ளனர் என்றும், புதிய மாவட்ட செயலாளரை தேர்வு செய்வதற்காக கட்சியினருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறியுள்ளார். 

தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை; மாறாக அவர்கள் ஆட்சியின் மீது குறியாக இருக்கிறார்கள். குடிநீர் பஞ்சத்தை மறைக்கவே தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் சேர்ந்துள்ளதை பூதாகரமாக காட்டுகின்றனர். 

டெல்லியிலிருந்து அச்சுறுத்தல் வந்ததால் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீ்ர்மானத்தை மு.க.ஸ்டாலின் வாபஸ் பெற்றார்" என்று பேசினார். 

 

Trending News