புதுச்சேரியில் ஜெ., சிலை வைக்க பரிசீலினை -நாராயணசாமி!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் சிலை வைக்க பரிசீலிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

Last Updated : Jul 22, 2019, 01:23 PM IST
புதுச்சேரியில் ஜெ., சிலை வைக்க பரிசீலினை -நாராயணசாமி! title=

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் சிலை வைக்க பரிசீலிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதல்வர் ஜானகிராமனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகி ராமனுக்கு சிலை வைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நாராயணசாமி, ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே புதுச்சேரியின் நீர்வள பாதுகாப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது, தமிழ் உட்பட மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க மத்திய அரசை வலியுறுத்துவது ஆகிய தீர்மானங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

முன்னதாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் புதுவை அரசு அவருக்கு வெண்கல சிலை வைக்கப்படும் என அறிவித்தது. மேலும் காரைகாலில் அமையவுள்ள மேற்கு புறவழிச்சாலைக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

5 முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த கலைஞர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த அறிவிப்பினை புதுவை முதல்வர் நாராயணசாமி வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது கருணாநிதிக்கு சிலை அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Trending News