தருமபுரி, சேலம் மாவட்டங்களில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்.....
தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியை சதீஷ், ரமேஷ் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்து மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க வலியுறித்தி அறிக்கை ஒன்றை தேமுதிக வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "தருமபுரி மாவட்டம், சிட்லிங் மலைக்கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள், பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும், கடந்தவாரம் சேலம் மாவட்டத்திலும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்படிருப்பதையும் தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
இதுபோன்று தொடர்ந்து இந்த சம்பவம்கள் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு உச்சதண்டனையான தூக்குதண்டனை கொடுத்தால் தான், இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காவண்ணம் தடுக்க முடியும். எனவே ஆட்சியாளர்களும், நீதித்துறையினரும் இதை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளது.