தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்..!
கொரோனா வைரஸ் (Corona Virus) காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் (School) மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு (Online Class) மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்நிலையில், தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை (Half-year exam) ஆன்லைனில் நடத்தலாம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்... “தனியார் பள்ளிள் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம். அதற்கு ஆட்சேபம் இல்லை. அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு (TN Govt) ஒத்திவைத்துள்ளது. அரசு சரியாக செயல் படுவதால் பள்ளிக்கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. 50 சதவீதம் பாடங்கள் குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும் தான் கேள்விகள் கேட்கப்படும்” என தெரிவித்தார்.
ALSO READ | தமிழகத்தில் பிப்ரவரியில் பள்ளிகள் திறக்கப்படலாம்: அரசு கூறுவது என்ன?
மேலும் அவர் கூறுகையில், பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு கூட பள்ளிகளை திறக்க முடியாத சூழல் தற்போது நிலவுகிறது. பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டாலும் அதற்கு பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்புவதால் பள்ளிகள் திறப்பு கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதனால் மாணவர்களுக்கான பாடங்கள், தேர்வுகள் என அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. இத்தகைய சூழலில், தனியார் பள்ளிகள் ஆன்லைனில் அரையாண்டு தேர்வுகள் நடத்தலாம் என அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR