பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார் என்றாலே அரசியல் களம் சூடுபிடிக்கும். சென்ற ஆட்சியில் தமிழ்நாடு வரும்போதெல்லாம் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுவதும், வானத்தில் கறுப்பு பலூன் பறக்கவிடுவதும், GoBackModi என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வதும் என தமிழக அரசியல் தளம் பரபரப்பை அடைந்தது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று ஓராண்டு ஆகியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி நாளை வருகிறார். இந்த முறை பல்வேறு நலத்திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். அவரது வருகையையொட்டி தமிழக அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
மேலும் படிக்க | டெல்லி : பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
10 ஆயிரம் போலீசார் சென்னை மாநகரம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடி காரில் வருகிறார். மாலை 5.45 மணி அளவில் பிரதமர் மோடி நேரு ஸ்டேடியத்துக்கு வருகை தருகிறார். இதனால் அவர் வரும் பாதை முழுவதும் இன்று இரவில் இருந்தே போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதாவது, 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
என்னென்ன திட்டங்கள் ?
1.) ரூ.500 கோடி மதிப்பில் மதுரை - தேனி 75 கிலோ மீட்டர் அகல ரயில்பாதை
2.) 590 கோடி ரூபாய் மதிப்பில் தாம்பரம்-செங்கல்பட்டு சென்னை புறநகர் ரயில் மூன்றாவது பாதை அமைக்கும் திட்டம்
3.) 850 கோடி ரூபாய் மதிப்புள்ள 115 கிலோ மீட்டர் தூரமுள்ள எண்ணூர்-செங்கல்பட்டு திட்டம்
4.) 850 கோடி ரூபாய் மதிப்புள்ள 271 கிலோமீட்டர் அடங்கிய திருவள்ளூர்- பெங்களூரு குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டம்
5.) பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தில், சென்னை கலங்கரை விளக்கம் அருகில் கட்டப்பட்டுள்ள 116 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1152 வீடுகளை அர்ப்பணிக்கிறார்.
மேலும் படிக்க | ஓ மை கடவுளே... பத்திரிகையாளர்களை பார்த்து பதறிய மோடி
6.) சென்னை - பெங்களூரு 262 கிலோ மீட்டர் அதிவிரைவு சாலை ரூபாய் 14 ஆயிரத்து 870 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் சென்னை பெங்களூரு பயண நேரம் 2-3 மணி நேரம் குறைகிறது.
7.) சென்னை துறைமுகம் - மதுரவாயல் நான்கு வழி பறக்கும் சாலை திட்டம் ரூபாய் 5850 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. 21 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நான்கு வழிச் சாலை நேரடியாக சென்னையின் எல்லையை துறைமுகத்தோடு இணைக்கிறது. அதுமட்டுமல்லாமல், இரண்டு மணி நேர பயணத்தை 15 நிமிடங்களாக குறைக்கிறது.
8.) தர்மபுரி-நெரலூரு தேசிய நெடுஞ்சாலையில் 3 ஆயிரத்து 870 கோடி ரூபாய் செலவில் 94 கிலோமீட்டர் தூரத்துக்கு நான்கு வழிப்பாதை அமைக்கும் திட்டம்
9.) அதேபோல், மீன்சுருட்டி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 31 கிலோமீட்டர் தொலைவுக்கு 720 கோடி ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்படுகிறது. இந்த திட்டம் அருகாமை கிராமங்களை தேசிய நெடுஞ்சாலைகளோடு இணைக்கும் புதிய திட்டமாகும்.
10.) சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களை ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பில் நவீனமயமாக்கும் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
11.) பிரதமரின் 'விரைவு சக்தி' (GATI Sakthi) தேசிய பெருந்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் 159 ஏக்கர் நிலத்தில் அமையவிருக்கும் பன்முனை சரக்கு பூங்காவிற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இத்தனைத் திட்டங்களையும் அடிக்கல் நாட்டிவிட்டு, இரவு 7 மணிக்கு மீண்டும் பிரதமர் மோடி டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். இரவு 7.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடையும் பிரதமர் மோடி, அங்கிருந்து இந்திய விமானப்படையின் விமானத்தில் புறப்பட்டுச் டெல்லி சென்றடைகிறார்.
மேலும் படிக்க | கங்கை அமரன் மன்னிப்பு கேட்க வேண்டும் - மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR