முறையான சாலை இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை டோலியில் 6 கிமீ தூக்கிச் சென்ற பரிதாபம்

இங்கு மலை கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு  பிரசவ வலி  ஏற்படும் போது முறையான சிகிச்சை கிடைக்காமல் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 15, 2021, 01:00 PM IST
முறையான சாலை இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை டோலியில் 6 கிமீ தூக்கிச் சென்ற பரிதாபம் title=

பிரசவ வலியில் துடித்த நிலையில், முதல் பிரசவத்திற்காக மருத்துவமனை செல்ல வேண்டிய கர்ப்பிணி பெண்ணை, போதிய சாலை வசதி இல்லாததால், 6 கிமீ வரை அவரது உறவினர்கள் டோலி கட்டி தூக்கிச்சென்ற சம்பவம் நாட்டில் பல இடங்களில் உள்ள உண்மை நிலையை படம்போட்டு காட்டியுள்ளது.  

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பலாம்பட்டு ஆகிய  ஊராட்சிக்குட்பட்ட  சுமார் 78 கிராமங்கள் இருக்கின்றன. இதில் 20 ஆயிரத்திற்க்கும்  மேற்பட்ட மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர். 

இங்கு மலை கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு  பிரசவ வலி  ஏற்படும் போது முறையான சிகிச்சை கிடைக்காமல் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு பிரசவம் பார்க்க உரிய நேரத்தில் மருத்துவர்கள் கூட செல்ல முடியாமல் போகின்றது.

பிரசவ வலியின் போது என்ன செய்வது என குழம்பும் உறவினர்கள், பின்னர் டோலி கட்டி கர்ப்பிணிகளை தோளில் சுமர்ந்து சுமார் 6 முதல் 10 கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டிய நிலைக்கே பெரும்பாலும் தள்ளப்படுகிறார்கள். 

ALSO READ | தந்தை - மகன் தூக்கிட்டு தற்கொலை; பரமக்குடியில் சோகம் 

அந்த பகுதியில் வசிக்கும் அனிதா மற்றும் ரஞ்சித் தம்பதியினருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில், அனிதாவுக்கு முதல் பிரசவ வலி ஏற்பட்டது. அவர் வலியால் துடிக்க துடிக்க, பதட்டமடைந்த உறவினர்கள், அவரை டோலியில் படுக்க வைத்து தோளில் சுமந்து சுமார் 6 கிலோ மீட்டர் நடந்து சென்றனர். 

அவர்கள் சுமார் 6 கிலோ மீட்டர் சென்ற நிலையில், தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு பிரசவம் பார்க்கப்பட்டு அனிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 

இதனையடுத்து தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இது போன்ற நிகழ்வுகள் காலங்காலமாக நடந்து வருவதால், மலைகிராமத்தில் பிரசவத்திற்காகவாவது ஒழுங்கான சாலைகளை அமைத்து தர வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ | கிரிப்டோவில் முதலீடு; அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News