தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென நேற்று இரவு அறிக்கை மூலம் அறிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் உள்ளது. பல அரசியல் தலைவர்களும் ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி (கிண்டி)க்கு ஒரு கேள்வி?' என சென்னை முழுவதும் இரவோடு இரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் ஏற்கனவே உள்ள இறுக்கமான சூழலில் இன்னும் பரபரப்பு கூடியுள்ளது.
'கொலை, கொள்ளை, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் உள்ளிட்ட கடும் குற்ற வழக்குகளை சந்தித்து வரும் 34 ஒன்றிய அமைச்சர்களை பதிவியிலிருந்து விலக்கச் சொல்லி டெல்லிக்கு கடிதம் எழுதுவீங்களா கிண்டி?' என தமிழக ஆளுநரை கேள்வி கேட்டும், 34 ஒன்றிய அமைச்சர்களை கடுமையாக விமர்சித்தும், தலைநகர் சென்னை முழுவதும் வழக்கறிஞர்.ஹேமந்த் அண்ணாதுரை அவர்கள் பரபரப்பு போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளார்.
சென்னை அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம், அண்ணா அறிவாலயம், சென்னை ப்ரெஸ் கிளப் வளாகம், விருந்தினர் மாளிகை, நந்தனம், பசுமை வழிச்சாலை, கிண்டி கத்திபாரா, சைதாப்பேட்டை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் போன்ற முக்கிய இடங்களில் இந்த போஸ்டர்கள் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கம்... ஆளுநர் சொல்லும் காரணம் என்ன?
முன்னதாக, இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை நேற்று மாலை வெளியிட்ட செய்திகுறிப்பில்,"பணி வழங்குவதற்கு பணம் கேட்டது மற்றும் பணமோசடி உட்பட பல ஊழல் வழக்குகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையான குற்றத்தை எதிர்கொண்டுள்ளார். அவர் அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, உரிய விசாரணை நடைபெறுவதற்கும், சட்டம் மற்றும் நீதியில் உரிய நடவடிக்கைக்கும் இடையூறாக இருந்துள்ளார். தற்போது அவர் குற்றவியல் வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளார். அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மேலும் சில குற்ற வழக்குகள் மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது, நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை எதிர்மறையாக பாதிக்கும். இது இறுதியில் மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்ற நியாயமான அச்சங்கள் உள்ளன. இந்நிலையில், ஆளுநர் ஆர். என். ரவி, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தகவல்களின் படி, ஆளுநரின் உத்தரவு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்ட செய்தி இரவு 7 மணியளவில் வெளியாகியது.
நள்ளிரவு 12 மணியளவில் உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாகவும், அட்டார்னி ஜெனரலின் கருத்தை கேட்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் 5 மணி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் படிக்க | மெக்கானிக்கல் இன்ஜினியர் டூ தமிழ்நாடு டிஜிபி... யார் இந்த சங்கர் ஜிவால்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ