அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 7 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு: TNGovt

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது!  

Last Updated : Dec 22, 2018, 03:43 PM IST
அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 7 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு: TNGovt title=

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது!  

தீபாவளி திருநாளைவிட பொங்கல் பண்டிகைக்குத்தான் தமிழ்நாட்டில் மவுசும் மதிப்பும் அதிகம். பொங்கல் விழாவிற்கு தமிழர் திருநாள் என்றும் கூறுவார். சோழர்கள் காலத்தில் இவ்விழா ‘புதியீடு’ என்கிற பெயரால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, ஆண்டு தோறும் பொங்கல் திருநாளுக்கு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழ் மக்களுக்கு தமிழக முதலவர் பொங்கல் பரிடு அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு, பொங்கல் திருநாளுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தைப்பொங்கல் திருநாள் உலகமெங்கும் வாழும் தமிழந்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. உழவந் பெருமக்கள், இயற்கையின்அருளினாலும், தங்கள் கடின உழைப்பாலும் விளைந்த  நெற்கதிர், கரும்பு, வாழை,இஞ்சி, மஞ்சள் ஆகிய பொருட்களை இறைவனுக்கு படைத்து வழிபட்டு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றார்கள்.

புது அரிசி கொண்டு பொங்கலிடும் இந்நன்னாளில் அனைவரின் வாழ்வில் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருக மனமார வாழ்த்துகிறேன். அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு, பொங்கல் திருநாளுக்கு முன்னரே சமந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். 

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அரசின் இந்த நடவடிக்கையின் மூலம்அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன் பெற்று பொங்கல் திருநாளை பாரம்பரிய முறைப்படி சீரோடும் சிறப்போடும் கொண்டாட வழிவகுக்கும். இப்பயனைப் பெற்று பொங்கல் திருநாளை தமிழ்நாடு மக்கள் இனிதே கொண்டாடி மகிழ வாழ்த்துகிறேன்" என அந்த அறிக்கையில் தமிழக முதலவர் ர்டப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

 

Trending News