பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கு குறித்து வீடியோ வெளியிட்டுள்ள கவிஞர் பா.விஜய், குற்றம் செய்தவர்களை சாலையில் தூக்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக பள்ளி, கல்லூரி மற்றும் குடும்ப பெண்கள் என கிட்டத்தட்ட ஆயிரத்துக்கு மேற்ப்பட்டவர்களை ஆசைவலையில் விழவைத்து, நம்பவைத்து, அவர்களை தனியாக அழைத்து அறையில் வைத்து மிரட்டி, அடித்து கும்பலாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த கொடூர செயலை வீடியோவாகவும் எடுத்து, அவர்களை மிரட்டி பணம் பறித்ததுடன், அவர்களை மீண்டும் பாலியல் வன்புணர்வுக்கு கட்டாயப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவத்துக்கு பின்னணியில் பெரிய அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இருப்பதால், ஆரம்பத்தில் போலீசாரும் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உட்பட சில கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் தந்து வந்தது.
பின்னர் இந்த கொடூர சம்பவம் சமூக வலைத்தளம் மூலமாகவும், நக்கீரன் பத்திரிக்கை மூலமாகவும் வெளிசத்துக்கு வந்தது. இதைபார்த்த அனைவரின் மனதை உலுக்கியது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் ஆதரவு குரல் பலமாக ஒலித்து வருகின்றன.
இதனையடுத்து இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான 4 குற்றவாளிகளான சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டார். பின்னர் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவ வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த சம்பவத்திக்கு பின்னால் அரசியல் தலைவர்கள் உட்பட பல பெரிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம். இதனால் நீதிமன்றம் கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தனர். சில கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை, தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பாடலாசிரியர் மற்றும் நடிகர் பா.விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
#PollachiSexualAbuse pic.twitter.com/vL4fxpA63e
— PA.VIJAY (@pavijaypoet) March 11, 2019