ஆவினில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் முன்ஜாமீன்கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ALSO READ | ராஜ யோகம் தரும் செவ்வாய் பெயர்ச்சி: 2022-ல் எப்போதெல்லாம் நிகழ்கிறது
இதனால், தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகிறது. அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம். இதேபோல், இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஜேந்திரபாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன் மற்றும் கார் ஓட்டுநர் ராஜ்குமார் ஆகியோரை காவல்துறையின் தனிப்படை கைது செய்துள்ளது. அவர்களிடம் ராஜேந்திர பாலாஜி இருக்கும் இடம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவின்பேரில் 2 துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 4 தனிப்படை ராஜேந்திர பாலாஜியை தேடி வருகின்றர். திருச்சி, சென்னை, தென்காசி மற்றும் கடலோர மாவட்டங்களில் அவர் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு சென்றிருக்கவும் வாய்ப்பு உள்ளது என்ற தகவலும் பரவி வருகிறது.
ALSO READ | 2022-ல் தோல்வியை வெற்றியாக மாற்ற எந்த ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR