PMK Thangar Bachchan Election Campaign in Virudhachalam: கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான், விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கூரைப்பேட்டை, குப்பநத்தம் நல்லூர், கோபுரபுரம், சின்னகண்டியாங் குப்பம், உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று மாம்பழ சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இருசக்கர வாகனங்கள் புடைசூழ, கிராமம் கிராமமாக சென்று, பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி சின்னமான மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் போகுது பொதுமக்கள் பெரும் ஆதரவளித்தனர்.
மக்களை, காலம் காலமாக அரசியல்வாதிகள் கவனிக்கவில்லை
பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் (PMK Candidate Thangar Bachchan), திரைத் துறையில் பொதுமக்களை சந்தித்த நான், தற்போது நேரில் சந்திப்பதாக கூறினார். உணவு உடை உள்ளிட்ட பொருட்களை வழங்கக்கூடிய மக்களை, காலம் காலமாக அரசியல்வாதிகள் கவனிக்கவில்லை எனவும், அரசியல் வியாபாரமாக மாறிவிட்டதாகவும், தற்போது மக்களை சந்திக்கும் போது மிகவும் வேதனை அடைவதாக தெரிவித்தார்.
வெற்றி பெற்ற பின்பு மக்களை யாரும் சந்திக்கவில்லை
மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் பொதுமக்கள் நம்பிக்கையுடன் வாக்களிப்பதாகவும், ஆனால் வெற்றி பெற்ற பின்பு மக்களை யாரும் சந்திக்கவில்லை என்பதை வேதனையுடன் பொதுமக்கள் தெரிவிப்பதாக தெரிவித்தார். நாள்தோறும் பொதுமக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளில் உள்ளதாகவும், அவர்களை சந்திக்க அரசியல்வாதிகளுக்கு திராணி இல்லை எனவும், என்னை டெல்லிக்கு அனுப்பினால் கண்டிப்பாக மக்களின் பிரச்சினையை தீர்ப்பேன் என்று உறுதி அளித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி எனக்கு நல்ல ஒரு வாய்ப்பை அளித்துள்ளது
நல்ல ஒரு வாய்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி எனக்கு அளித்துள்ளதாகவும், இதைப் பார்க்காமல் படம் எடுத்து என்ன பயன் எனவும், நல்ல படம் எடுத்தால் நாடு முன்னேறி விடுமா? என்று கூறிய பாமக வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான், செய்ய வேண்டிய கடமைகள் அதிகமாக உள்ளது எனக் கூறி மாம்பழத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.
மேலும் படிக்க | சின்னம் பார்த்து வாக்களிக்காதீர்கள் - பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேண்டுகோள்!
செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் இயக்குனர் தங்கர்பச்சான்
செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் மருத்துவர். கோவிந்தசாமி, மாநில மகளிர் அணி செயலாளர்கள், மருத்துவர் தமிழரசி மற்றும் சிலம்புச் செல்வி, மாநில இளைஞரணி செயலாளர் இ.கே சுரேஷ், மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் சிங்காரவேல், மாவட்ட தேர்தல் பணி குழு தலைவர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் தனசேகர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
பேட்டி: இயக்குனர் தங்கர்பச்சான் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ