விஜயகாந்த்தை சந்தித்த பியூஷ் கோயல்: கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையா?

இன்று மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 19, 2019, 07:12 PM IST
விஜயகாந்த்தை சந்தித்த பியூஷ் கோயல்: கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையா? title=

இன்று மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இன்று இறுதி செய்யப்பட்டது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 5 தொகுதியில் பாஜக போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதுக்குறித்து கருத்து தெரிவத்த மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் கூறியதாவது: அதிமுகவுடன் கூட்டணி அமைந்தது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் மோடியை பிரதமராக தேர்தேடுக்க இந்த கூட்டணி அமைந்துள்ளது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம். அதேவேளையில் இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவோம் என பியூஷ் கோயல் கூறியிருந்தார்.

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவாரத்தை முடிவடைந்ததை அடுத்து, தேமுதிக தலைவர் விஜயகாந்தை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் மத்திய அமைச்சர் பியூஷ்கோயல். இதுக்குறித்து பேசிய அமைச்சர், விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிக்கவே அவரை சந்தித்து பேசினேன். விரைவில் உடல் நலம் பெற்று வரவேண்டும் என்று அவரிடம் கூறினேன். 

முன்னதாக, கடந்த 16 ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து தமிழகம் திரும்பினார். அப்பொழுது நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று விஜயகாந்த் தெரிவித்திருந்தார் என்பது குரிப்பிடதக்கது.

Trending News