காரில் தீப்பிடித்து எரிந்த சென்ட் பாட்டில் -எச்சரிக்கை மக்களே!

Ramanathapuram News: வாசனைத் திரவியம் வெயிலின் தாக்கத்தால் தீப்பிடித்த காரில் இருந்த சென்ட் பாட்டில். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Written by - Shiva Murugesan | Edited by - JAFFER MOHAIDEEN | Last Updated : Apr 1, 2022, 05:20 PM IST
  • காரில் இருந்து அதிகப்படியான புகைமூட்டம் வெளியானதால் பரபரப்பு.
  • சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் வாசனை திரவியம் தீப்பிடித்து எரிந்தது.
  • வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்
காரில் தீப்பிடித்து எரிந்த சென்ட் பாட்டில் -எச்சரிக்கை மக்களே! title=

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக ராஜேந்திரன் என்பவர் பணியாற்றி வருகின்றார். இவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் சாதி பெயரை சொல்லி இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. 

இதனை கண்டித்து முதுகுளத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த சொகுசு கார்களில் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த காரின் உள்ளே இருந்த வாசனை திரவியம் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் வாசனை திரவியம் தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து சொகுசுக் காரில் இருந்து அதிகப்படியான புகைமூட்டம் வெளியானதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சொகுசு காரின் அருகிலேயே தீயணைப்புத் துறையினரின் வாகனம் இருந்ததை அடுத்து தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் சொகுசு காரை திறந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் படிக்க: திமுகவுக்கு ஆஸ்கார் விருது : ஜெயகுமார் அறிவிப்பு..!

முன்னதாக, கடந்த 27ஆம் தேதி தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜ கண்ணப்பன் அவர்கள் அவரது உதவியாளர் மூலம் அமைச்சரை பார்க்க (BDO) இராஜேந்திரன் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதையடுத்து  முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) ராஜேந்திரன்,  சிவகங்கையில் உள்ள அமைச்சரின் வீட்டுக்குச் சென்றபோது அமைச்சர் ராஜகண்ணப்பன் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதிப்பெயரைச் சொல்லி இழிவாகப்பேசி மன உளைச்சலுக்கு ஆளாகியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மன உளைச்சலில் இருந்த (BDO) ராஜேந்திரன் பத்திரிக்கையாளர் சந்தித்து தன்னை சாதி பேரைச் சொல்லி இழிவாக அமைச்சர் பேசினார் எனத் தெரிவித்தார்.

ராஜேந்திரனை சமுதாய பெயரைச் சொல்லி திட்டியதாக வந்த புகாரை அடுத்து அவருடைய சமுதாய மக்கள் ஊர்வலமாக வந்து முதுகுளத்தூரில் காக்கூர் முக்குரோடு சாலையில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்,  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: போக்குவரத்துத்துறையிலிருந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி மாற்றம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News