130 கோடி மக்கள் வாழும் தேசத்தில் மோடியை மட்டுமே மக்கள் பிரமராக ஏற்றுள்ளனர் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேலையில் கோவை கொடீசியா மைதானத்தில் இன்று அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இக்கூட்டதில் பங்கேற்ற பேசிய முதல்வர் பழனிசாமி தெரிவிக்கையில்.,
2ஜி அலைகற்றை முறைகேடு மூலம் தமிழகத்தை திமுக தலைகுனிய வைத்தது. எதிர் கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் 130 கோடி மக்கள் வாழும் தேசத்தில் மோடியை மட்டுமே பிரதமராக ஏற்றுள்ளனர் என தெரிவித்தார்.
மேலும் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலினின் கருத்தை அவர்களது கூட்டணி கட்சிகளே ஏற்கவில்லை. மிகப்பெரிய ஊழல் செய்த திமுகவினர் ஊழல் தொடர்பாக பிரச்சாரம் செய்கின்றனர்.
பாஜக அறிவித்துள்ள நதிநீர் இணைப்பு திட்டம் வந்தால் தண்ணீர் பிரச்சினை இருக்காது. நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்தார்.
வரும் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையின் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பிரதமர் மோடிக்கு வெற்றியை தருவோம். 40 மக்களவை தொகுதிகள் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். எதிர்காலம் சிறப்பாக இருக்கவும் வளம் காணவும் மோடியை மீண்டும் பிரதமராக்குவோம் என உறுதி தெரிவித்தார்.