நாடாளுமன்ற தேர்தல்; வேட்பாளர் வேட்டையை துவங்கியது அதிமுக!

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் வரும் பிப்ரவரி 4 முதல் 10 வரை விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2019, 12:18 PM IST
நாடாளுமன்ற தேர்தல்; வேட்பாளர் வேட்டையை துவங்கியது அதிமுக! title=

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் வரும் பிப்ரவரி 4 முதல் 10 வரை விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கழக உறுப்பினர்கள், தலைமை கழகத்தில் வருகின்ற 4.2.2019 திங்கட்கிழமை முதல் 10.2.2019 ஞாயிற்று கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் உறுப்பினர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.25,000 செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News