இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும், துயரங்களையும் நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு தவக்காலம் கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. கோவேறு கழுதைகள் மேல் இயேசுகிறிஸ்து பவனியாக செல்லும்போது ஜெருசலேம் மக்கள் அவரை தாவிதின் குமாரனுக்கு ஓசன்னா, என வழி நெடுக வரவேற்றனர். அப்போது குருத்தோலைகளை மக்கள் பிடித்து இயேசுவை வரவேற்றதாக வேதாகமம் கூறுகிறது. இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் குருத்தோலை ஞாயிறு பவனி நடக்கிறது. குருத் தோலையை பிடித்தவாறு ஆலயத்தை சுற்றிவரும் கிறிஸ்தவர்கள், ஆலயம் அமைந்துள்ள பகுதிகளில் ஊர்வலமாக செல்வர்.
மேலும் படிக்க | சர்ச்சைக்குள்ளான அமித் ஷா பேச்சு: நழுவிய ஈபிஎஸ்; உறுதி காட்டிய ஓபிஎஸ்
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற பவனி, இந்தாண்டு கிறிஸ்தவ ஆலயங்களில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. குருத்தோலை ஞாயிறையொட்டி நாகை மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது. பேராலயத்தின் தலைமைப் பங்குத் தந்தை இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்குத் தந்தைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற குருத்தோலை பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்தியப்படி கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக சென்றனர். அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
மேலும் படிக்க | அணில் கதையும், தெர்மாகோல் ப்ளேஷ்பேக்கும்.!
இதையடுத்து, வரும் 14ம் தேதி பெரிய வியாழன் தினம் அனுசரிக்கப்படுகிறது. அடுத்த நாளான வெள்ளிக்கிழமை இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்த தினம். துக்கமான அந்த நாள், புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதலை நினைவு கூரும் வகையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இயேசுகிறிஸ்துவின் உயிர்தெழுதலை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்வர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR