காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பதன் மூலமே ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளின் தேசிய அளவிலான நோக்கங்கள் நிறைவேற முடியும் என்றும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
''எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாகத்தான் ஏற்கெனவே நான்கு மாநிலங்களில் ஆட்சியிலிருந்த பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்து வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் ஏற்கெனவே பெற்ற வெற்றியை விடக் குறைவான எண்ணிக்கையில்தான் கிடைத்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தி வருகிற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை 2024இல் அகற்றுவதுதான் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்.
(1) எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையின்மை காரணமாகத் தான் ஏற்கனவே நான்கு மாநிலங்களில் ஆட்சியிலிருந்த பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்து வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் ஏற்கனவே பெற்ற வெற்றியை விடக் குறைவான எண்ணிக்கையில் தான் கிடைத்திருக்கிறது. pic.twitter.com/db4IRJ8N3o
— K.S.ALAGIRI (@KS_Alagiri) March 14, 2022
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்து தேர்தல் களத்தை எதிர்கொள்ள வியூகம் வகுத்தார். இதனால் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்தது.
மேலும் படிக்க | "தமிழகத்தின் விடிவெள்ளி உதயநிதி ஸ்டாலின்!" - பாராட்டிய மிஷ்கின்
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கிய படிப்பினையாகும். இந்த படிப்பினையைச் சரியான புரிதலோடு ஏற்றுக்கொண்டு லாபக் கணக்குப் போடாமல், இந்தியாவின் எதிர்கால நலன் கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு தமிழகத்தைப் போல் வியூகம் அமைக்க வேண்டும்.
தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில்தான் பாஜகவையும், பிரதமர் மோடியையும் வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பதன் மூலமே ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளின் தேசிய அளவிலான நோக்கங்கள் நிறைவேற முடியும்''.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகிறாரா ப.சிதம்பரம்? காங்கிரஸ் கட்சிக்குள் ஸ்லீப்பர் செல்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR