அரசுப்பேருந்து முன்பதிவு தொடங்கியது.. September 7 முதல் பேருந்தில் பயணிக்கலாம்

தற்போது அரசுப்பேருந்து முன்பதிவு தொடங்கியுள்ளதால், ஆன்லைன் மூலம் அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 5, 2020, 07:50 AM IST
  • தமிழக அரசுப்பேருந்து (TN Govt Bus) முன்பதிவு தொடங்கியது.
  • நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
  • செப்டம்பர் 7 முதல் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும்
அரசுப்பேருந்து முன்பதிவு தொடங்கியது..  September  7 முதல் பேருந்தில் பயணிக்கலாம் title=

சென்னை: சென்னை மாநகரத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி. இன்று முதல் அரசுப்பேருந்து (TN Govt Bus) முன்பதிவு தொடங்கியது. நேரடியாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்று முன்பதிவு டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம். அதேநேரத்தில் ஆன்லைன் (Online Bus Ticket Booking) மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் (Coronavirus In Tamil nadu) பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு மார்ச் மாதம் முதல் அமல் செய்யப்பட்டதால், சுமார் ஐந்து மாதங்களாக பேருந்து சேவை தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் சொந்த ஊருக்கு போக முடியாமல் பலர் தலைநகரத்தில் சிக்கிக்கொண்டனர். 

தற்போது அரசுப்பேருந்து முன்பதிவு தொடங்கியுள்ளதால், ஆன்லைன் மூலம் அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. 

ஊரடங்கு (Lockdown) காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொது போக்குவரத்து மீண்டும் மாநிலத்தில் தொடங்கப்பட்டது. மொத்த பேருந்துகளில் 59% மட்டுமே இயக்கப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளைக் கொண்டு, நிலையான இயக்க முறைமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | 

இரவு 9 மணிவரை மட்டுமே பேருந்து சேவை: போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Sep 7 முதல் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில்கள், தனியார் பேருந்துகளுக்கு அனுமதி: EPS

முன்னதாக, அன்லாக் நான்காம் கட்டத்தில் (Unlock 4) தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்துப்பட்டது. கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோயால் நீடித்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாட்டுக்கு பிறகு, தமிழகம் வரும் 7 ஆம் தேதி முதல் பேருந்து சேவை (Bus Service) தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டன.

அதாவது  செப்டம்பர் 7 முதல் தனியார் பேருந்துகள் மற்றும் பயணிகள் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தமிழக அரசாங்க அறிவிப்பு தெரிவித்துள்ளது.

அதேபோல பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை தமிழக மாவட்டங்களுக்குள் இரவு 9 மணிவரை மட்டுமே பேருந்து சேவை இயக்கப்படும் என்று மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் (M R Vijayabhaskar) அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News