அலுவலங்களில் காகித பயன்பாட்டை குறைக்க தமிழக அரசின் புதிய திட்டம்!!

அரசு அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைப்பதற்காக செயல்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டம் குறித்து அரசு அலுவலர்கள் கூட்டமைப்புக்கு நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Feb 25, 2020, 02:47 PM IST
அலுவலங்களில் காகித பயன்பாட்டை குறைக்க தமிழக அரசின் புதிய திட்டம்!! title=

அரசு அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைப்பதற்காக செயல்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டம் குறித்து அரசு அலுவலர்கள் கூட்டமைப்புக்கு நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்!!

சென்னை: தமிழக அரசு அலுவலக நடைமுறைகள் மற்றும் பணப்பரிவர்த்தனைகளை ஆன்லைனில் செயல்படுத்த வலியுறுத்தி நிதித்துறைச் செயலர் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக அரசு அலுவலர்கள் கூட்டமைப்புக்கு அரசின் நிதித்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அரசு அலுவலகங்களில் காகிதப் பயன்பாட்டை குறைக்கவே அலுவலக நடைமுறைகளை ஆன்லைனில் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறினார். 

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் அரசு அலுவலக நடைமுறைகள், பணபரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலமாக செயல்படுத்தும் புதிய திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரிட்சாத்த முறையில் அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலர்களின் கூட்டமைப்பு முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், புதிய நடைமுறையை செயல்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களை எதிர் காலத்தில் சரி செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த செயல்முறையை கைவிடுவது அடுத்து வரும் திட்டங்களுக்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என தெரிவித்துள்ளார்.  

 

Trending News