ISROவின் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவரான விஞ்ஞானி ஆராவமுதன் காலமானார்

ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் (spaceport) மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக பணியாற்றிய விஞ்ஞானி ராமபத்ரன் ஆராவமுதன் காலமானார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 5, 2021, 09:23 PM IST
  • மூத்த விஞ்ஞானி ஆராவமுதன் காலமானார்
  • ISROவின் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவர் ஆராவமுதன்
  • முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் பணியாற்றியவர்
ISROவின் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவரான விஞ்ஞானி ஆராவமுதன் காலமானார் title=

சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மற்றும் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் மூத்த விஞ்ஞானியான ராமபத்ரன் ஆராவமுதன் புதன்கிழமை இரவு, தனது பெங்களூரு இல்லத்தில் காலமானார்.

84 வயதான ஆராவமுதன் அவர்களின் மனைவி கீதா, மூத்த பத்திரிகையாளர் ஆவர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த விஞ்ஞானி, கண்காணிப்பு மற்றும் டெலிமெட்ரி ரேடார் நிபுணர் என இந்திய அறிவியல் துறைக்கு சிறப்பாக பங்களித்த மூத்த விஞ்ஞானி ஆராவமுதன், சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். 

தனது பணியின் தொடக்க காலத்திலேயே இஸ்ரோவில் முதலில் இணைந்த ஆராவமுதன், ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் (spaceport) மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக பணியாற்றினார்.

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்து முதல் ரேங்க் வாங்கிய ஆராவமுதன், இந்தியாவின் அணுசக்தித் துறையில் (Department of Atomic Energy) பணியாற்றினார். பிறகு, டாக்டர் சாராபாயின் கீழ் பணிபுரிந்தார். திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்ட ராக்கெட் ஏவுதளத்தில் முக்கிய பங்காற்றினார் ஆராவமுதன். இதற்காக நாசாவில் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

Also Read | கொரோனா 3வது அலை ஆகஸ்டில் தொடங்குமா; நிபுணர்கள் கூறுவது என்ன..!!

அங்கு, அடிப்படை கண்காணிப்பு மற்றும் டெலிமெட்ரியைக் கற்றுக் கொண்ட ஆராவமுதன், ஏவப்பட்ட ராக்கெட்டின் செயல்திறன் மற்றும் பாதையைப் புரிந்துகொள்வதில் நிபுணத்துவம் பெற்றார். நாசாவில் இருந்தபோது தான் சக விஞ்ஞானியான அப்துல் கலாமை சந்தித்தார்.

டான் என்று பிரபலமாக அறியப்பட்ட ஆராவமுதன் 1966 ஆம் ஆண்டில், தும்பாவில் பணிபுரிந்தபோது, இஸ்ரோவின் சில வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

ஆராவமுதன் ஒரு சோதனை ராக்கெட் பேலோட்டில் வேலை செய்யும்போது, சக விஞ்ஞானியான ஏபிஜே அப்துல் கலாம் அவருக்கு உதவி செய்யும் புகைப்படமும் அவற்றில் ஒன்று. டாக்டர் கலாம் இந்திய குடியரசுத் தலைவரான பிறகு சமூக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் அதிகம் பகிரப்பட்ட புகைப்படம் இது. 

1997 இல் இஸ்ரோவில் இருந்து ஓய்வு பெற்ற ஆராவமுதன்,  நேற்று இரவு, இவ்வுலகில் இருந்து விடைபெற்றார்.

Also Read | மதுரையில் பயங்கரவாத எதிர்ப்பு பாதுகாப்பு பயிற்சி மேற்கொண்ட என்.எஸ்.ஜி வீரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News