தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து அறிகுறிகளுடன் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தால், அவர்களுடன் தொடர்புடைய நபர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும். கட்டுப்படுத்தப்பட்ட பணியிடங்களில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களை கண்காணிக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | Omicron symptoms: எச்சரிக்கை! இதுதான் Omicron இன் புதிய அறிகுறிகள்
அறிகுறி இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு 5 மற்றும் 10 ஆவது நாளில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக மருத்துவத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது. மேலும், அனைத்து சர்வதேச பயணிகளும் ஏர் சுவிதா இணையதளத்தில் சுய விவரத்தை பதிவு செய்ய வேண்டும், பயணத் தேதிக்கு முந்தைய 14 நாட்களுக்கான பயண விவரத்தை பதிவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிப்புகள் கொண்ட நாடுகளை தவிர, மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் உத்தேச பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், அறிகுறி இருப்பது உறுதியான வெளிநாட்டு பயணிகள், மருத்துவ உதவிக்கு எண் 104 மற்றும் மாநில கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
ALSO READ | Omicron: 7 மாநிலங்களில் இரட்டை இலக்கத்தை எட்டிய ஒமிக்ரான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR