2025ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 13 படங்கள்!! ‘இந்த’ 1 படத்திற்கு மவுசு அதிகம்!!

Most Anticipated Movies In 2025 : வரும் 2025ஆம் ஆண்டில் பல படங்கள் வெளியாக இருக்கின்றன. அதில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்கள் குறித்து இங்கு பார்ப்போம். 

Most Anticipated Movies In 2025 : 2024ஆம் ஆண்டின் முதல் பாதி கொஞ்சம் மந்தமான படங்களுடன் செல்ல, அடுத்த பாதி பெரிய ஹீரோக்களின் படங்களின் ரிலீஸால் நிரம்பியிருந்தது. இதே போல 2025ஆம் ஆண்டிலும், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்கள் வெளியாக இருக்கின்றன. இவை டாப் ஹீரோக்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கமல்ஹாசன் உள்ளிட்ட ஹீரோக்களின் படங்களாகும். அப்படி, மக்களின் ஆவலை அதிகமாக கிளப்பிவிட்டிருக்கும் படங்கள் குறித்து இங்கு பார்ப்போம். 

1 /8

அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம், வீர தீர சூரன் பாகம் 2. இந்த படம், 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக இருக்கிறது. 

2 /8

கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் படம், தக் லைஃப். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. 

3 /8

அஜித்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் இரண்டு படங்கள் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படமும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படமும் உருவாகியிருக்கிறது. இந்த இரண்டு படங்களில் ஒன்று பொங்கலுக்கும் இன்னொன்று மே மாதம் ரிலீஸாவதாக கூறப்படுகிறது.

4 /8

தனுஷ் நடித்திருக்கும் பல படங்கள் அடுத்த ஆண்டில் வெளியாக இருக்கின்றன. அவர் எழுதி இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை திரைப்படம், இயக்கியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் அடுத்த ஆண்டில் வெளியாகிறது. அதே போல அவர் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் குபேரா. இந்த படமும் அடுத்த ஆண்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

5 /8

சூர்யா நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான கங்குவா படம் பெரும் தோல்வியடைந்தது. இதையடுத்து, அவர் நடிப்பில் சூர்யா 44 படம் உருவாகி முடிந்துள்ளது. அதே போல, சூர்யா 45 படத்தின் பணிகளும் முழு வேகத்தில் நடந்து வருகிறது. இந்த படங்கள் அடுத்த ஆண்டில் வெளியாக இருக்கின்றன. 

6 /8

ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் கூலி. இந்த படத்தில், நாகார்ஜுனா, உப்பேதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு மே மாதத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

7 /8

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அவரது 23ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கிறார். இத்துடன் சேர்த்து அவரும் சுதா கொங்கராவுடன் இவர் பணிபுரியும் சிவகார்த்திகேயன் 25வது படமும் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு வெளியாகலாம். 

8 /8

2025ல் வெளியாக இருக்கும் படங்களுள், மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக இருக்கிறது தளபதி 69. இந்த படம், விஜய்யின் கடைசி படமாகும். இதில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம், 2025ல் அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது.