தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு!

Last Updated : May 26, 2020, 08:01 PM IST
    • சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்வு.
    • கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,731 லிருந்து 9,342 ஆக அதிகரிப்பு.
    • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 611 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
    • தமிழகத்தில் 12 வயதிற்குட்பட்ட 1,088 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு.
    • 13-60 வயதிற்குட்பட்ட 9,685 ஆண்கள், 5,415 பெண்கள் என மொத்தம் 15,105 பேருக்கு தொற்று.
    • 60 வயதிற்குட்பட்ட 952 ஆண்கள், 583 பெண்கள் என மொத்தம் 1,535 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு! title=

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 127ஆக அதிகரிப்பு... 

தமிழகத்தில் இன்று மேலும் 646 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்வு. 

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.... மாநிலத்தில் இன்று புதிதாக 646 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 17,728 ஆக அதிகரித்துள்ளது. அதில் 54 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 17,728 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 68 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 10,289 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 7 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலையில் தலா ஒருவரும் என 9 பேர் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் தெலுங்கானாவில் இருந்து தமிழகம் வந்தவர் ஆவார். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய பாதிப்புகளில் திருவள்ளூரில் 25 பேர், செங்கல்பட்டில் 23 பேர், காஞ்சிபுரத்தில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Image

Image

இதை தொடர்ந்து, இன்று ஒரே நாளில் 611 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 9,342 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 8,256 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,088 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 15,105 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 1535 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 412357 பேருக்கு மட்டுமே கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.அதேபோல் தமிழகத்தில் மொத்தம் 431739 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டில் இன்று 22 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 857 பேருக்கு கொரோனா உள்ளது. கடலூரில் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 436 பேருக்கு கொரோனா உள்ளது.

Trending News