இனி தாலிக்கு தங்கம் இல்லை : உட்டாலக்கடி செய்த பிடிஆர் - உண்மை என்ன?

தமிழ்நாட்டில் தாலிக்கு தங்கம் திட்டம் 5 வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு திட்டத்தினை தற்போது மாற்றியமைத்திருக்கிறார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Mar 18, 2022, 05:06 PM IST
  • ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் இனி இல்லை
  • தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றியமைப்பு
  • திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததால் மாற்றம்
இனி தாலிக்கு தங்கம் இல்லை : உட்டாலக்கடி செய்த பிடிஆர் - உண்மை என்ன? title=

தமிழக அரசின் சார்பில் திருமண நிதியுதவித் திட்டம் 1989ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. அன்றைய முதலமைச்சர் கருணாநிதி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் 2011ஆம் ஆண்டு முதல் தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதனை 8 கிராம் தங்கமாக மாற்றினார். அன்று முதல் பத்தாம் வகுப்பு முடித்த பெண்களுக்கு 25,000 ரூபாய் மற்றும் 8 கிராம் தங்கமும், பட்டதாரி பெண்களுக்கு 50,000 ரூபாய் மற்றும் 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தாலிக்கு தங்கம் திட்டம் தமிழக அரசால் ஐந்து வெவ்வேறு திட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.

  1. ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி - மூவலூர் ராமாமிர்த அம்மையார் திருமண உதவித்திட்டம்
  2. கலப்புத் திருமணம் செய்யும் பெண்கள் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திருமண உதவித்திட்டம்
  3. கைம்பெண்களின் மகள்களுக்கு - ஈவெரா மணியம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்
  4. கைம்பெண்களின் மறுமணத்துக்கு - டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் திருமண உதவித்திட்டம்
  5. ஆதரவற்ற பெண்களுக்கு - அன்னை தெரசா திருமண உதவித்திட்டம்

இவ்வாறு 5 வகையாக பிரிக்கப்பட்டு தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மூவலூர் ராமாமிர்த அம்மையார் திருமண உதவித்திட்டத்தை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என பட்ஜெட்டில் மாற்றம் செய்து அறிவித்துள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் 2022-23: எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு, முழு விபரம்

இந்த திட்டத்தின் மூலம் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த பெண்கள் பட்டப்படிப்பு படிக்கும் காலத்தில் அவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் அரசின் சார்பில் வரவு வைக்கப்படும். இப்படி மாதம் 1000 ரூபாய் வழங்குவதால் பெண்களின் கல்வி இடைநிற்றலை தடுக்கலாம் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இப்படி திட்டத்தை மாற்றியமைத்துள்ளதால் இனி ஏழைப் பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்படுகிறதா என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுகிறது. இதற்கு அரசின் தரப்பில் இருந்து முறையான விளக்கம் இல்லை. ஆனால் நமது நிருபர்கள் அளித்த தகவலின்படி ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் ரொக்கமும் தாலிக்கு தங்கமும் இனி வழங்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாகத்தான் உயர்கல்வி உறுதித் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

இதுவரை இருந்த திட்டத்தின்கீழ் ஏழைப் பெண்கள் என்று நிரூபிக்க வருமான சான்றிதழ் வழங்க வேண்டும். இதில் நிறைய முறைகேடுகள் நடப்பதால் இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News