சென்னை: காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியிலுள்ள மஹா பெரியவரின் மணி மண்டபத்தில் காஞ்சி சங்கர மட பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் இன்று நடைபெற்ற மானனீய ஸ்ரீ எஸ்.வேதாந்தம்ஜி அவர்களின் ஸ்ரீ காளசாந்தி வைபவம் நிகழ்ச்சியில் பா.ஜ.கவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றார்.
அப்போது அவர் மேடையில் பேசுகையில், 'தமிழில் 40 சதவிகிதம் சப்தம், வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் இருந்து தான் வந்துள்ளன. அதற்கு ஓர் உதாரணமாக, திராவிடம் என்று கூறி வந்த கருணாநிதியின் பெயரிலுள்ள கருணா என்ற சொல்லும் சமஸ்கிருதம், நிதி என்ற சொல்லும் சமஸ்கிருதம் தான். கட்சி சின்னமான
உதயசூரியன் என்ற சொல்லிலும் உதயன் என்பதும் சமஸ்கிருதம் சூரியன் என்பதும் சமஸ்கிருதம் தான். இந்த கருத்தை நாம் எல்லோரும் பிரச்சாரம் பண்ண வேண்டும். பள்ளி கல்லுரிகளில் சிலபஸ்ஸில் சொல்ல வேண்டும் உள்ளிட்ட ஆறு கருத்துகளை இந்து மானிபஸ்ட்டோ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன்’ என பேசினார்.
மேலும் படிக்க | பாவம் போலீஸ்.. அவங்க பிரச்சனையை யார்தான் பேசுறது??
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி, ‘சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது, அது முடிவுக்கு வந்துவிட்டது. ராம சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளேன்.
இங்கு உள்ள சில முட்டாள்தனமான அமைச்சர்கள் மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்தை ஆரம்பிப்போம் என கூறி வருகிறார்கள். யாராலும் இனி சேது சமுத்திரத் திட்டத்தை தொட முடியாது. முதல் மனுவில் சேது சமுத்திரத் திட்டத்தை தொடக் கூடாது என்பது குறித்து வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெற்றிருக்கிறேன். பாரம்பரிய சின்னமாக அறிவிக்க சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு வருகிற 22-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது. அது முடிந்துவிட்டது.’ என தெரிவித்தார்.
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெறுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் வராது என்றும் அதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR