உலகம் முழுவதும் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரசுக்கு தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த வைரஸ் பாதிப்பை தடுக்க பொது சுகாதார நடவடிக்கைகள் அவசியம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் முந்தைய வகைகளை விட குறைவான வீரியம் கொண்டது. இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி போன்ற லேசான அறிகுறிகள் மட்டுமே ஏற்படுகின்றன. உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவு. இந்த வைரஸ் குளிர்காலம் என்பதால் அதிகமாக பரவி வருகிறது. எனவே, பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
மேலும் படிக்க | 'தயாநிதி மாறன் பேச்சு... கொதிக்கும் INDI கூட்டணி...' காரணத்தை சொல்லும் அண்ணாமலை!
2019 ஆம் ஆண்டு முதல் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு மாறுபாடுகளுடன் புதிதாக பரவிக் கொண்டே இருக்கிறது. இதன் ஒவ்வொரு மாறுபாடும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டே இருகின்றன. கடைசியாக வந்த இரண்டு அலைகளும் பெரும் உயிரிழப்பையும், உடல் உபாதைகளையும் கொடுத்து சென்றன. இதில் இருந்து மக்கள் மீளவே இல்லை. பெரும்பாலானோர் தங்களுக்கு நெருக்கமானவர்களை கொரோனா வைரஸூக்கு பறி கொடுத்தனர். இப்படியான சூழலில் தான் புதிய வேரியண்ட் இப்போது பரவிக் கொண்டிருக்கிறது.
இந்த மாறுபாட்டுக்கு கொரோனா ஜெ.என்..1 என பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் இந்த வைரஸ் தமிழ்நாட்டிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை 4 பேருக்கு கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஜெ.என்..1 பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அதேநேரத்தில் மிக கவனமாக இருப்பது அவசியம். மற்ற வேரியண்டுகளை விட ஜெ.என் 1 கொரோனா வைரஸ் மிகவும் எளிதாக பரவுகிறது. ஆனால் தீவிர சிகிச்சை எடுத்துக் கொள்ள்ள வேண்டிய வாய்ப்பு மிக குறைவு.
இந்த வைரஸ் புதிய உருமாற்றம் அடைய வாய்ப்பு இருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அது வீரியம் பெற்று மக்களை அச்சுறுத்த வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். எப்படி இருந்தாலும் பொதுமக்கள் கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்துக் கொள்ள அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்வது சிறந்தது.
மேலும் படிக்க | பேரிடரே இல்லை என்றவர் அதை ஆய்வு செய்ய வருகிறார்... உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ