நீட் தேர்வில் SC தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது: உயர் நீதிமன்றம்

நீட் தேர்வில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 29, 2021, 12:43 PM IST
  • குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
  • விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றனர்.
  • வழக்கு விசாரணை ஜூலை மாதம் 5-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
நீட் தேர்வில் SC தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது: உயர் நீதிமன்றம்  title=

திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேவை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு ரத்து செய்யப்ப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், நீட் தேர்வு மாணவர்களிடையே ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு ஒன்றை மாநில அரசு அமைத்தது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, அக்குழுவின் தலைவர் ஏ.கே.ராஜன்  இது வரை மொத்தம் 86,342 மனுக்கள் கிடைத்துள்ளன என்றும், அதில் ஆதராவகவும், எதிராகவும் கருத்துக்கள் கிடைத்துள்ளனதாகவும் கருத்துகளை ஆராய்ந்து விரிவான ஆய்வறிக்கையை தயாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், நீட் (NEET) தேர்வு பாதிப்பு குறித்து ஆராய குழு அமைத்து மாநில அரசு பிறப்பித்துள்ள அரசாணையை அதை ரத்து செய்யக் கோரியும், குழுவிற்கு தடை விதிக்க கோரியும் தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ALSO READ | NEET தாக்கம் குறித்து 86342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்: ஏ.கே. ராஜன் குழு

 

அந்த மனுவில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது. மேலும், மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை, மருத்துவ ஆணையம், ஆலோசனை குழுமம் ஆகியோர்களிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்ற நிலையில், அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளதாக  மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் இந்த விவகாரத்தை மாநில அரசு, அரசியலாக்கக் கூடாது எனவும், ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க ஏதுவாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையை, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (ஜூன் 29)  மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர். இது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றனர்.

இதையடுத்து, வழக்கு குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க  வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை ஜூலை மாதம் 5-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

ALSO READ | Cancel NEET: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News